(Reading time: 7 - 14 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

முடியும்?

  

வேறு ஒரு வழியும் இல்லாமல் தொடர்ந்து அமுதாவை போன், மெசேஜ், மெசெஞ்சர் என தொடர்புக் கொள்ள முயன்றுக் கொண்டே இருந்தாள்!!!

  

ப்படியே நாட்கள் சென்றுக் கொண்டிருக்க, மஞ்சு தன் வருத்தங்களை மனதுக்குள்ளேயே வைத்து வெதும்பிக் கொண்டிருந்தாள்! அவளால் நிர்மலா, பத்மா, வினோ, சாதனா, ஜோதி என யாருடனுமே இயல்பாக பேச முடியவில்லை! அதனால் தேவைக்கு மட்டும் பேசி தன் சோக வாழ்வில் தனியாக உழன்றுக் கொண்டிருந்தாள்.

  

திடீரென்று மனோஜ் வந்து அவளை கட்டி அணைத்து, “pbs!” என்று கன்னத்தில் முத்தமிடவும், மஞ்சுவிற்கு நடப்பது நிஜமா அல்லது அவளின் கற்பனையா என்று சந்தேகமாக இருந்தது!

  

அவள் குழப்பத்துடனே நிற்க, மனோஜ் கையில் இருந்த தாள்களை அவள் முன் நீட்டினான்.

  

“எனக்கு வேலை கிடைச்சிடுச்சு pbs! சீனியர் மேனேஜர் போஸ்ட்! இப்போ வாங்குறதை விட அம்பது பெர்சன்ட் அதிக சம்பளம். எஸ், ஐ டிட் இட்!!!!”

  

முகம் பிரகாசிக்க, வாயெல்லாம் பல்லாக சொன்னவனை ஜீவனே இல்லாத கண்களால் பார்த்தாள் மஞ்சு!

  

சும்மா பெயருக்கு கூட கங்கிராட்ஸ் என்று அவனுக்கு வாழ்த்து சொல்ல அவளுக்கு தோன்றவில்லை!

  

முகத்தை திருப்பிக் கொண்டு அவனை விட்டு விலகிச் சென்றாள்.

  

மனோஜ் திகைத்துப் போய் நின்றான்!

      

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

2 comments

  • nice epi sis pavam manju stress athikam ana ena panrathu manasu vitu pesa oruthar kantippa venum
  • :Q: manjuvin kobam purigirathu.manoj enna seiya porangannu parppom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.