(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

சிறுவனைப் போல அவன் கேட்ட விதம் ஹரிணிக்கு பிடித்து இருந்தது.

  

“நான் எதுக்கு பொய் சொல்றேன்? உன் முடி எல்லாம் நல்லா தான் இருக்கு.”

  

“அப்போ இந்த போட்டோ ப்ராபளமா இருக்குமோ?? என் புது டிபி பார்த்து தான் பசங்க அப்படி சொல்லிட்டு இருந்தாங்க.”

  

“எங்கே அந்த போட்டோவை எனக்கு காட்டுப் பார்க்கலாம்?”

  

விவேக் தான் சூப்பர் ஸ்மார்ட்டாக தெரிவதுப் போல இருக்கும் ஒரு போட்டோவை மொபைலில் தேடி எடுத்து ஹரிணியிடம் காட்டினான்.

  

“இந்த போட்டோவை பார்த்து யாராவது அப்படி சொல்வாங்களா? ஹீரோ மாதிரி இருக்க விவேக்!” என்று பெருமை பட்டாள் ஹரிணி!

  

“சும்மா சொல்லாதீங்கம்மா. நான் இதை தான் டி.பி யா வச்சிருந்தேன். இப்போ மாத்திட்டேன்.”

  

“என்ன ஆச்சு விவேக் உனக்கு? யார் என்ன சொல்றாங்கன்னு எல்லாம் நீ எப்போ யோசிக்க ஆரம்பிச்ச?? உனக்கு பிடிச்சதை சரியா செய்வீயே???”

  

“க்ரூப்ல எல்லோருமா மாத்தி மாத்தி கலாட்டா செய்தாங்க, வேற என்ன செய்ய!”

  

“அதெல்லாம் காதுலே போட்டுக்கவே கூடாது!”

  

“இவ்வளவு சொல்றீங்களே, நான் உங்க மகன் தானே? நீங்க இந்த போட்டோவை உங்க டிபி யா வைப்பீங்களா???”

  

“வைக்காம என்ன? என் மகன் அழகன்! அதுல எனக்கு எப்போவும் பெருமை தான்! இந்தா என் போன். நீயே டிபி மாத்தி வை!”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.