(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

விவேக் விரும்பியது அதையே தான்!!!

  

அதனால் கும்மாளம் போடும் மனதுடன் ஹரிணி போனின் வாட்ஸ் அப் டிபி ஆக அவனுடைய புகைப்படத்தை மாற்றி வைத்தான்.

  

அப்போது அப்படியே வாட்ஸ் அப்பின் CALLS டேபை ஓபன் செய்துப் பார்த்தான். அவன் நினைத்துப் போலவே சான்வியின் இந்திய நம்பர் தான் மேலே இருந்தது!

  

அவன் முகத்தில் தானாக குறுநகை அரும்பியது.

  

“என்னம்மா நம்பர் இது? புதுசா இருக்கு? உங்க பிரென்ட் யாராவதா??” தெரியாததுப் போல அந்த நம்பரை காண்பித்துக் கேட்டான்.

  

எந்த நம்பர் என்றுப் பார்த்த ஹரிணி, “ஆதித்யாவோட அக்கா கிட்ட பேசினேனே, அந்த நம்பர் விவேக். நல்லப் பொண்ணு, நல்லா பேசுறா! ஆதித்யா தான் இவ்வளவு கூச்சப்படுறான்!” என்றாள்.

  

“புது இடம் என்பதால் அவன் அப்படி இருக்கானா இருக்கலாம். ஆதித்யாவை நல்லா பார்த்துக்குறேன்னு சும்மா ஒரு மெசேஜ் அவன் அக்காக்கு அனுப்பி வைக்க வேண்டியது தானே நீங்க?”

  

“ஆமா! ஆதித்யா நம்ம வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்னு அவக் கிட்ட சொல்லி இருந்தேன்.”

  

“அப்போ, நானே அனுப்புறேன்.” என சொன்ன விவேக், ஹரிணி எண்ணில் இருந்து,

  

Sanvi dear don’t worry. I will tc of ur bro.

  

என மெசேஜ் அனுப்பினான்.

  

அந்த மெசெஜின் அருகே இரண்டு டிக் மார்க்குகள் தோன்றி, சில வினாடிகளிலேயே சான்வி

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.