கௌசல்யாவும் பரமனும் சண்டையில்லாமல் நன்றாக பேசி பழகினார்கள். அவர்களது பழக்கத்தைக் கண்ட வர்தினியும் ஸ்ரீரங்கனும் கூட ஆச்சர்யப்பட்டார்கள். ஸ்ரீரங்கன் சொன்னதற்காகவோ அல்லது கௌசி இருப்பதாலோ பரமன் கடலுக்கும் செல்லாமல் பேக்டரிக்கும் செல்லாமல் பொறுப்பாக வீட்டிலேயே இருந்தான், அவர்கள் இருவரின் தலைகாயத்தின் கட்டை மாற்றுவதற்காக அடிக்கடி ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றான் ஸ்ரீரங்கன்.
ஒரே ஆஸ்பிட்டல் என்பதால் 4 முறை சென்று வந்தார்கள் இருவரும், தலை கட்டும் அவிழ்க்கப்பட்டு அவர்களின் தலை காயம் சரியாக ஒரு மாதம் பிடித்தது. அதற்கு அடுத்து வந்த வெள்ளிக்கிழமை விடிகாலை 5 மணிக்கு,
”குரு எல்லா படகும் ரெடியா, 6 மணிக்குள்ள கடலுக்கு கிளம்பிடனும்டா இதோ நான் கிளம்பிட்டேன் ஆமாம் சரியா அரை மணி நேரத்தில உன் முன்னாடி நிப்பேன்” என ஃபோனில் பரமன் ரகசியமாக பேசிக்கொண்டே தன் அறையை விட்டு வெளியே வர கௌசல்யா அவன் முன் நின்றாள்.
விடிகாலையில் அழகாக தயாராகி எங்கோ கிளம்புவது போல் இருந்தவளைக்கண்டு புன்னகை பூத்தபடியே
”குரு நான் வந்துட்டேன் நீ ரெடியா இரு” என ஃபோனில் அமைதியாக சொல்லிவிட்டு கட் செய்தவன் கௌசியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு
”என்ன கௌசி காலையில ரெடியா இருக்க, தலைகாயம் சரியாயிடுச்சி அதான் ஊருக்கு கிளம்பிட்டியா” என கேட்க அவளோ
”சின்ன மாமா” என சிணுங்கினாள்.
காலை நேரத்தில் அவளின் இந்த சிணுங்கல் கேட்கவே இதமாக இருக்கவே மனம் அலைபாய அவளிடம் ஹஸ்கி வாய்சில் பேசினான் பரமன்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.