நரகமாக்கி இருப்பாங்க.. என் pbs மட்டும் தான் ஹர்ட் ஆனாலும் என்னை புரிஞ்சு நடந்துக்கிட்டது... அவளை மாதிரி யாருமே கிடையாது... என் மனைவி தான் சூப்பர் மனைவி...” என நிறுத்தாமல் புகழ்ந்து தள்ளினான்...!!!
மஞ்சு சிரித்தாள்... அவனின் அணைப்பில் இருந்துக் கொண்டே முகத்தை நிமிர்த்தி அவனின் விழிகளை நேராக பார்த்து சிரித்தாள்...
“என் இடத்துல இன்னொருத்தியா??? இப்படி என் கிட்டேயே சொல்ல, உங்களுக்கு ரொம்பவே தைரியம் தான்...!!!! சரி, அது போகட்டும்.... இன்னொரு தடவை நீங்க கொஞ்ச நாளா நடந்துக்கிட்ட உர்ர் உர்ர் மனோஜா நடந்தா, நான் புரிஞ்சு நடந்துப்பேன்னு எல்லாம் கனவு காணாதீங்க... உங்களுக்கு கையை தூக்க தெரியும்னா, எனக்கு அடிக்கவே தெரியும்!!!”
“ஓஹோ...!!! ரொம்ப பயமா இருக்கே...” என்றான் மனோஜ் விளையாட்டாக!!!
“ஆமாம்... அந்த பயம் மனசுல எப்போவும் இருக்கட்டும்...”
“பயமா தான் இருக்கு... ஆனால் அதை விட உன் கோபத்தை, அடிதடியை சாம்பிள் பார்க்கவும் ஆசையா இருக்கே... என்ன செய்தா கோபப்படுவ...??”
“மனோஜ்...!!!”
“இப்படி கிஸ் செய்தா கோபம் வருமா??” எனக் கேட்டுக் கொண்டே அவளின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டவன்...
அவள்,
“மனோஜ்...” என்று தடுப்பதா வேண்டாமா என அரை மனதுடன் சிணுங்கியதை கண்டுக்கொள்ளாமல்,
“வேற என்ன செய்யலாம்... உனக்கு எப்போ கோபம் வரும்...???” என யோசிப்பதாக நடித்தவன், உரிமையுடன் அவளின் இடையை தன் கைகளால் அழுத்தமாக பற்றவும்... திகைப்பும்,