(Reading time: 11 - 21 minutes)
Inspector Then
Inspector Then

இன்னிக்கு வரைக்கும் நம்ப முடியலை சார். ரொம்ப கலகலப்பான பொண்ணு. நல்ல பொண்ணும் கூட. கலாட்டா செய்தாலும் மரியாதை கொடுக்குற பொண்ணு!”

  

தென்றல்வாணன் ரோசியின் பேச்சை கவனித்துக் கொண்டே அவளை எடைப் போட்டான்! பேச்சில் நிதானம்! குரலில் அமைதி! பொறுமையின் மறு உருவம் என சொல்லலாம் போல இருந்தது.

அன்னைக்கு வேற ஏதாவது வித்தியாசமா இருந்ததா?” என விசாரித்தான் வினோதன்.

  

இல்ல சார், டாலிங்க (நாய்கள்!) கட்டி போட்டிருந்தது தான் வித்தியாசம். மத்தபடி எதுவும் இல்லை.”

  

நீங்க நைட் எத்தனை மணிக்கு பொதுவா கிளம்புவீங்க?”

  

அம்மா தூங்கினப்புறம் கிளம்புவேன். பொதுவா பதினோரு பன்னிரெண்டு மணி ஆகும். கார்ல என்னை வீட்டுக்கே கொண்டு போய் டிராப் செய்வாங்க அதனால பயமில்லை.”

  

ஓகே! அப்போ இந்த இன்சிடன்ட் நடந்தற்கு முன்னாடி நாள் நைட் நீங்க கிளம்பினப்போ நாய்ங்களை கட்டி போடலையா?”

  

இல்லை சார். அதுங்க என் பின்னாடியே வாலாட்டிட்டு கேட் வரைக்கும் வந்தது நினைவிருக்கு. மறுநாள் அதுங்களை கட்டி போட்டிருந்ததுன்னு சொன்ன உடனே எனக்கு குழப்பம் ஆயிடுச்சு. அப்புறம் சின்ன மேடம் சொல்லி தான் கட்டி போட்டாங்கன்னு கேள்வி பட்டேன்.”

  

அப்படி யாரு உங்க கிட்ட சொன்னது?”

  

சிறிது நேரம் யோசித்த ரோசி,

  

எனக்கு ஞாபகமில்லையே சார். ஆனால் அன்னைக்கு நான் கிளம்பின நேரத்துல அம்மா தூங்கிட்டாங்க, நானும் என் பொண்ணு வீட்டுக்கு போயிட்டேன். திலீப் சார் காலையில தான் வந்தார். சோ அமிர்தா மேடம் தான் டாலிங்களை கட்டி போட்டிருக்கணும்!”

3 comments

  • Just as Then mentioned, Krishnan seem to be the only person who was in the ryt track. Aquarium, dogs ellame suspicious aga iruku. Dilip or Amrutha is some sort of related to the murder?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.