தொடர்கதை - பனிப் பாறை - 15 - பிந்து வினோத்
சரவணனால் மனதில் ஏற்பட்டு இருந்த ஆதங்கம் காரணமாக கல்பனா அமைதியாக தன் வேலையை செய்துக் கொண்டிருந்தாள். அவளுடன் ட்ரெய்னிங்கிற்காக வந்திருந்த மற்ற நான்கு பேரும் பேசி கலகலத்துக் கொண்டிருந்தார்கள். கல்பனா அதில் கலந்துக் கொள்ளவில்லை.
“துர்கா இது உனக்கான ஸ்பெஷல் டிப்...” என்று கிரேஸ் சொல்லத் தொடங்கியப் போது சுசித்ரா அங்கே வந்தாள்.
உடனே கிரேஸ் வாயை மூடிக் கொண்டாள்!
“அது என்ன துர்காக்கான ஸ்பெஷல் டிப், கிரேஸ்?” என்று சுசித்ராவே கிரேஸிடம் கேட்டாள்.
“அது மேம்....” கிரேஸ் சொல்லாமல் இழுக்கவும், சுசித்ராவிற்
...
This story is now available on Chillzee KiMo.
...
் சொல்லுங்க மேடம்...”
“நீங்க தான் கேட்டீங்க அப்புறம் என்னை திட்ட கூடாது...!!!! இந்த டையட்டிங் டிப் என்னன்னா, உங்களை குண்டாக்குற சில பொருட்களை அவாயிட் செய்யனும்...”