(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 15 - தேன்மொழி

   

கேஸ் ஃபைல் - 02 - குற்றம் புரிந்தவர்... !

  

கிருஷ்ணன், நான் க்ரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டர் வினோதன். இவர் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன்.

  

கிருஷ்ணன் எந்த ஆர்வமும் இல்லது கசப்புடனே அவர்களை எதிர் கொண்டார்.

  

“ரோஹினி கேஸ் இப்போ நாங்க ஹாண்டில் செய்றோம். எங்களுக்கு உங்க உதவி வேணும்.”

  

“நான் எதுக்கு சார் உங்களுக்கு உதவி செய்யனும்? அதான் எனக்கு அப்புறம் நாலு இன்ஸ்பெக்டர் விசாரிச்சாங்களே அவங்களை போய் கேளுங்க.”

  

“கிருஷ்ணன், நாங்க அது போன்ற ஆஃபிசர்ஸ் இல்லை என்பதால தான் உங்க கிட்ட வந்திருக்கோம். நாங்க சாட்சிங்க கிட்ட பேசின வரையில் நீங்க ஒருத்தர் தான் ப்ராப்பரா இன்வெஸ்டிகேட் செய்திருப்பதாக தோணுது. உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க. ரோஹினியோட அப்பா, அம்மா நிலைமை உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். அவங்களுக்கு நியாயம் கிடைக்குறது முக்கியம். இது நம்ம டிபார்ட்மென்ட்க்கே அவசியம்!“

  

தென்றல்வாணன் சொன்னதைக் கேட்டு ஆமொதிப்பதுப் போல கிருஷ்ணன் தலை அசைத்தார்.

  

“சார் உங்களை பத்தி கேள்வி பட்டிருக்கேன் அதனால மட்டும் தான் சொல்றேன். இதுக்கு மேல அடி பட எனக்கு தெம்பில்லை சார். உங்களைப் போல அந்தப் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கனும்னு யோசிச்சு ரொம்பப் பட்டுட்டேன் சார்.”

  

“கமான் கிருஷ்ணன்! எங்களை நீங்க முழுசா நம்பலாம். உங்களுக்கு தெரிஞ்சதை எல்லாம் சொல்லுங்க.”

  

“அந்த கேஸ் ஆரம்பத்துல இருந்தே நடந்ததை சூசைட்ன்னு மூட ஒரே ப்ரெஷர் சார். முதல்ல நான் ஸ்பாட்டுக்கு போன போதே அங்கே இருந்த திலீப் உடனடியா சூசைட்ன்னு சொல்லி விஷயத்தை க்ளோஸ் செய்ய சொன்னார். பிரபலமான பணக்கார குடும்பம், இன்ஸ்பெக்டர் அவங்களுக்கு நெருக்கமானவர் வேற... இருந்தாலும் எனக்கு ,மனசு கேட்கலை சார். அவங்க சொன்னதற்கும் அங்கே நான் பார்த்ததற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தது. அந்த வீட்டுல

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.