(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

****************

  

“....சீக்கிரமா இந்த தமிழை கண்டுப்பிடிச்சு விசாரிக்க வேண்டியது அவசியம் சார்!” என்று டிஎஸ்பி யிடம் விபரங்களை விளக்கினான் தேன்.

  

“நீ சொல்றது புரியுது தேன். இது கேஸை தப்பான ரூட்ல போக வைக்குற முயற்சியா கூட இது இருக்கலாமே?

 

“அதை கன்ஃபர்ம் செய்றதுக்கான முயற்சிகளில் நானும் வினோதனும் இறங்கப் போறோம் சார். தமிழ் ஒரு கிரிமினல். ஏற்கனவே அவன் மேல வேற நிறைய கேஸ் இருக்கு. அவனை பிடிச்சிட்டா, கஸ்டடில எடுத்து விசாரிக்குறதுல பிரச்சனை வராது. இதை தனியா ஹாண்டில் செய்தா ரோஹினி கேஸ்ல தொடர்பானவங்களுக்கு சந்தேகம் வராது. அதே நேரத்துல நாம ரோஹினி பாடியை திரும்ப எக்ஸ்யூம் (exhume) செஞ்சு லேப்ல டெஸ்ட் செய்தா உண்மை தெரிஞ்சிரும். தமிழ் மேல இப்போதைக்கு இருக்குறது எல்லாமே எக்ஸ்டார்ஷன் (extortion) கேஸுங்க தான். மிரட்டல், அடி தடின்னு இருந்தாலும் இது வரைக்கும் கொலைன்னு அவன் மேல எதுவும் ரெகார்ட்ல இல்லை. அவனை பிடிச்சு விசாரிச்சா அவன் மதியூர்ல ரோஹினி கொலையான நாளில் என்ன செய்துட்டு இருந்தான்னு தெரியும்.”

 

“இது எல்லாமே யூகங்கள் தானே தேன்? வேற சாலிட் ரீசன் என்ன இருக்கு?

 

வினோதன் குறுக்கிட்டு பேசினான்.

  

“சார், justice delayed is justice denied. ஏற்கனவே நாம ரோஹினி விஷயத்துல ரொம்ப டிலே செய்துட்டோம். தமிழ் ஒரு கிரிமினல் சார். அவன் எப்படியும் சட்டத்தால தேடப் படுற ஒரு குற்றவாளி. இப்போ அவனைப் பிடிச்சா இந்த் கேஸுக்கும் உதவியா இருக்கும் அவ்வளவு தான்!”

 

“புரியுது. நான் என்னால முடிஞ்சதை செய்றேன். உங்க இரண்டு பேர் மேல சில கம்ப்ளேயின்ட்ஸ் வந்திருக்கு. நீங்க ஹையர் ஆபிஷியல்ஸ் கால்ஸ் அட்டென்ட் செய்றது கிடையாதாம். மரியாதை கொடுக்க மாட்டேங்குறீங்களாம்?”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.