(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

யாருக்குமே, திலீப் உட்பட சிகரெட் பழக்கம் இல்லை. ஆனால், க்ரைம் சீன் பக்கத்துல சிகரெட் துண்டுங்க இருந்தது. அதை இன்ஸ்பெக்டர் கண்டுக்கவே இல்லை. நான் சொன்னப்போவும், அதெல்லாம் தேவை இல்லாத தலைவலின்னு சொல்லி ரிப்போர்ட்ல கூட அவர் சேர்த்துக்கலை. அதே போல இறந்த பொண்ணோட தலையிலேயும் முதுகிலேயும் காயம் இருந்தது. அதை பத்தியும் எங்கேயுமே மென்ஷன் ஆகலை. நான் அதைப் பத்தி இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்டதற்கு, அவர், அது அந்த பொண்ணு கிணத்துல விழுந்தப்போ பட்டிருக்கும், இதெல்லாம் சும்மா நோண்டிட்டு இருக்காதேன்னு சொன்னார்.”

  

“பேதடிக்!”

  

“ஆமாம் சார்! டம்மி டெஸ்ட் செய்து பார்த்திருந்தால் சூசைட்ன்னு சொல்றது சரியா தப்பான்னு கண்டுப் பிடிச்சிருக்கலாம். ஆனால் இன்ஸ்பெக்டர் அதுக்கு ஒத்துக்கலை. அதே போல தான் செக்யூரிட்டி கேட்ட அந்த மோட்டார் பைக் சத்தம். அதுக்கும் இன்சிடன்டுக்கும் தொடர்பு இருக்குன்னு எனக்கு தோணிச்சு ஆனால் இன்ஸ்பெக்டர் அதை எல்லாம் காது கொடுத்து கூட கேட்கலை.”

  

“ஓ!”

  

“விசாரிச்சா தானே சார் தொடர்பு இருக்கா இல்லையான்னு கண்டுப்பிடிக்க முடியும்! அதனால நான் என்னால முடிஞ்ச அளவில் விசாரணையை அன்-அஃபிஷியலாக செய்தேன் சார். மதியூர் ஹை-வேல இருக்க டோல் ஸ்டாப்ல செக்யூரிட்டி கேமரா இருக்கு. அதுல விபரம் சேர்த்தேன். மதியூர் ஹைவே பயன்படுத்துறவங்க 90% பேர் டூரிஸ்ட் தான். அங்க பைக்குல வரவங்க ரொம்ப கம்மி. அதும் இந்த சம்பவம் நடந்த சமயத்துல திரும்ப திரும்ப வந்தது ஒரே ஒருத்தன் தான். அந்த பைக் நம்பர் வாங்கி அவனை ட்ரேஸ் செய்தேன். அவன் ஒரு ரவுடி சார். பேர் டெரர் தமிழ். பெரிய ஆளுங்களை ஏதாவது சொல்லி ப்ளாக்மெயில் செய்து பணம் கரக்குறது தான் அவன் வேலை. அவன் மேல பல கேஸ் பென்டிங்குல இருக்கு.”

  

“இதை இன்ஸ்பெக்டர் கிட்ட சொன்னீங்களா?”

  

“அதை சொன்னதால தான் சார் இப்போ ட்ராஃபிக் போலீசா இருக்கேன்.”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.