“ஷிட்!”
“அந்த தமிழ் பேரு கொடா எங்கேயும் வரலை. அவனை தப்பிக்க விட்டுட்டாங்க. வேற பெரிய ஆள் யாரையோ காப்பாத்த நடக்கிற சதி இது.”
“ம்ம்ம்... அப்படி தான் தோணுது. தேங்க் யூ வெரி மச் கிருஷ்ணன்! நீங்க கொடுத்த விபரங்கள் இந்த கேஸை புது கோணத்துல பார்க்க வைக்குது. அந்த தமிழை ட்ராக் செய்ய பார்க்கிறேன்.”
“வெல்கம் சார்...”
“நாங்க கிளம்புறோம் கிருஷ்ணன்! வேற ஏதாவது ஞாபகம் வந்தா சொல்லுங்க.”
கிருஷ்ணன் தயக்கத்துடன் அவர்களை பார்த்தார்.
“என்ன ஆச்சு கிருஷ்ணன்?”
“சார் இன்னுமொரு விஷயம்.”
“தயங்காம சொல்லுங்க.”
“சார், இதை நான் செய்திருக்க கூடாது. தப்பு தான். ஆனாலும் நல்ல எண்ணத்துல தான் செய்தேன்!”
“அப்படி என்ன செஞ்சீங்க?”
“அந்த பொண்ணு தற்கொலை செய்துக்கலைன்னு எனக்கு 100% தெரிஞ்சது. அதை ப்ரூவ் செய்யும் ஆர்வத்தை இன்ஸ்பெக்டர் தடுத்துட்டார். ஆனாலும் அப்படியே விட்டுற மனசு வரலை அதனால அந்த பொண்ணோட ஸ்டமக் கான்டன்ட் சாம்பிள்ள இருந்து கொஞ்சம் எடுத்து தனியா லேப்ல கொடுத்து டெஸ்ட் செய்தேன்.”