(Reading time: 7 - 14 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

ஆங்கிலத்தில் தடுமாறி பதில் சொன்னான்.

  

கேள்வி கேட்ட பெண்மணி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

  

அவருக்கு ஆதித்யா சொன்ன பதில் புரியவில்லையோ என்ற எண்ணம் அக்ஷராவிற்கு ஏற்பட்டது.

  

“ஆதி சொன்னதையே நான் ஸ்ட்ரெஸ் செய்து திரும்ப சொல்றேன்,” எனத் தொடங்கி, அழகான ஆங்கிலத்தில் அவன் சொன்ன பதிலை தெளிவாக எடுத்து சொன்னாள் அக்ஷரா.

  

“தேங்க்ஸ்,” என்ற பெண்மணி, ஆதித்யாவின் தோளில் தட்டினார்.

  

“நீ சொன்ன பதிலும் எனக்குப் புரிந்தது உன்னைப் போல ஒரு யங் மேன் கிட்ட இருந்து இப்படி ஒரு அருமையான பதிலை நான் எதிர்பார்க்கலை. குட் ஜாப்!” என்று ஆதித்யாவை பாராட்டினார்.

  

அடுத்து அவர்கள் இருவரையும் ஒன்றாக விரலால் சுட்டிக் காண்பித்து, “உங்க டீம் காம்பினேஷன் அருமை. இரண்டுப் பேரும் நல்லா ஒருவரை ஒருவர் காம்ப்ளிமென்ட் செய்றீங்க. ஐ லைக் இட். குட் லக்,” என்றும் சொல்லி விட்டு சென்றார்.

  

அவருக்கு “தேங்க்ஸ்” என்று இவர்கள் இருவரும் சொல்வதற்கு முன்பே அவர்களை கடந்து சென்று விட்டார்.

  

அடுத்த கேள்வியுடன் அடுத்த ஜட்ஜ் உடனே வராததால் அக்ஷரா தயக்கமாக ஆதித்யாவைப் பார்த்தாள்.

  

அவள் அவன் சொன்னதையே மீண்டும் ஆங்கிலத்தில் புரியும் விதத்தில் சொன்னது அவன் மனதை புண் படுத்தி இருக்குமா என்ற கேள்வி அவளுக்கு வந்திருந்தது.

  

“சாரி ஆதி, நான் அப்படி அதிகப் பிரசங்கித்தனமா பேசி இருந்திருக்க கூடாது. அவங்க அப்படி பார்த்ததுக்கு எனக்கு அர்த்தம் புரியலை தப்பா நினைச்சு பேசிட்டேன்.” உண்மையாகவே

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.