மானசா கண்ணீரோடு இரண்டு கால்களையும் மடித்து கட்டிக்கொண்டு, தன் முகத்தை கால் முட்டியில் புதைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்... இது அவளுடைய மூன்று மாதமாக ஒவ்வொரு நாளும் நடை பெறுவது வழக்கமாக ஆகிவிட்டது.... திடீரென்று, வயிற்று புரட்டி எடுத்தது, வாஷ்பேசினை நோக்கி ஓடினாள்... வாந்தி எடுத்து விட்டு முகத்தை அலம்பிக் கொண்டு திரும்பி வந்து உட்கார்ந்தாள் ... உடம்பு வலி ஒரு புறம் வயிற்று புரட்டல் ஒரு புறம் தவித்தாள்....
கீழே இறங்கிச் சென்றாள்.
"எந்தா அம்மே, முகமெல்லாம் ஒரு மாதிரி உண்டு, சீக்கோ?"
" அறியல?, வயிற்று புரட்டல், வாமிட்டிங்!" என்று கூறினாள்.
அவள் கையை தன் கையில் எடுத்து நாடியை சோதித்தாள் வேலை செய்யும் மரியம்மை... சோதித்தவுடன், மரியம்மை சிரித்துக் கொண்டே "அம்மே வல்லிய சந்தோஷ சேதி அம்மே!"
"அப்படி என்ன சந்தோஷ சேதி ?"
வயிற்றை காண்பித்து, "ஒரு குஞ்சு ஒன்னு வந்துட்டிலோ"
மானசா பயந்தாள், என்ன? நான் பிரக்னன்ட்டா?' என்று தன் மனதில் தானே கேட்டுக் கொண்டாள் .
"ஆமாம் எண்ட மோளே, உனக்கு ஒரு குஞ்சு வன்னு?"
ஐயோ இது என்ன புதுசா ஒரு பிராப்லம், யார்கிட்ட சொல்றது, என்ன பண்றது?' "மோளே, வா ஒரு டாக்டரை போய் பார்க்கலாம்?"
"இல்ல வேணாம் மரியம்மை , இத நீங்க அவர்கிட்ட சொல்லாதீங்க?"
epadi irukiga
very happy for u r new story
story read pannala unka name pathathum type panniten
story read pannitu comment panren sis