(Reading time: 17 - 34 minutes)
Manasa Theevu
Manasa Theevu

"ஏய், அதெல்லாம் ஒன்னும் இல்லை அவனுக்கு தெரியனும் ,அவனுக்கு தெரியாமல் எதுவும் செய்ய முடியாது."

  

"சரி அவனுக்கு போன் போடு! "என்று நம்பரைக் குறிப்பிட்டார்.

  

மானசா கார்த்திக்கிற்கு போன் செய்தாள்.அவன் போனை எடுத்தவுடன் அவள் பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுதாள்." போன் செய்து பேசாமல் யார் ஆக்கும் இது?" என்று அவன் கேட்டுக் கொண்டு  இருந்தான்

  

பிறகு அவளே "நான் தானடா மானசாக்கா."

  

"யாரு மானசாக்காவா?"

  

" ஆமாடா நான் தான்."

  

" ஐயோ அக்கா எத்தனை வர்சன்னல்  ஆச்சு உன்னோட பேசி. நீ எப்படி இருக்கிறாய்? எங்கே இருக்கிறாய் ?"என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

  

"இரு கார்த்திக் ,அதுக்கு முன்ன விஷயம் இருக்கு. நம்ம அச்சனுக்கு உடம்பு சரியில்லை அவர் ஆஸ்பிடல்ல இருக்கிறார். நாளைக்கு காலையில ஆப்ரேஷன் நீ உடனே கிளம்பி வா."

  

" ஐயோ அச்சனுக்கு எந்து ஆயி என்ன சொல்றா டாக்டர்?"

  

"அதெல்லாம் உன் அத்திம்பேர் பார்த்துப்பார் சரியா? நீ இங்க வா அவ்வளவுதான். அம்மாவுக்கு ஹெல்ப் வேண்டும் நீ இங்கே வா."

  

“சரிக்கா, நான் இப்பவே கிளம்புறேன் ராத்திரி மிட் நைட் கூடி அங்கு வந்து சேருவேன்."

  

" சரிடா கார்த்திக், நாளைக்கு பாப்போம் அப்போ மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாம் சரியா? நீ ஜாக்கிரதையா வா."

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.