(Reading time: 11 - 22 minutes)
Manasa Theevu
Manasa Theevu

தொடர்கதை - மானசா தீவு – 09 - விஜேஜி

கார்த்திக்கின் பெண் சிவரஞ்சனி, மானசா தான்  ஆசையாக வைத்த பெயர். ஆனந்த் பைரவிற்கு அவள் மேல் அளவு கடந்த பாசம் இப்போது அது காதலாக மாறி இருக்கிறது.  ஆனால் அவள் இன்னும் சின்னப் பெண் என்ற காரணத்தினால், அவளிடம் அவன் எதுவும் காண்பித்துக் கொள்ளவில்லை.

  

அவன் ஒவ்வொரு வாரமும், அவளை ஃபோனில் அழைத்து பேசுவான். அவள் ஸ்கூலைப் பற்றி, அவள் படிப்பை பற்றி ஒரு சில பொழுது அவளுக்கு தெரியாததை, வீடியோ காலில் சொல்லிக் கொடுப்பான்.

  

அவள் எந்த காலேஜில் சேரவேண்டும் என்று எல்லாம் அவளுக்கு எடுத்து  கூறுவான். அவனைக் கேட்காமல் அவள் ஒன்றும் செய்ய மாட்டாள். அவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு புரிதல்.

  

அவன் மீது அவளுக்கிருந்த அன்பு, அவளுக்கு அது காதலாக மாறிக்  கொண்டிருந்தது , அவள் தோழிகள் அவளுக்கு " ஹேய், நீ உங்க அத்தை பையனை லவ் பன்றியா?" என்று கேட்கவும்

  

" ஏய்.... லவ்வெல்லாம் இல்ல, அவர் என் மேல ரொம்ப காரிங்கா இருக்கார் அவ்வளவுதான். " என்று கூறவும்,

  

 

  

"இதுதான் லவ்.." என்று அவள் தோழி ஜூலியட் எடுத்துக் கூறினாள். அதை கேட்ட அவள் குழம்பினாள்.

  

வீட்டுக்கு வந்ததும் அவளுக்கு தன் தோழிகள் கூறியது அவள் மனதுக்குள் மேல் மேலும் அவனைப் பற்றியே, அவன் தன்னிடம் பேசும் போது அவனுக்கும் தன் மீது காதல் தானோ, என்றுதனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தாள்.

  

அந்த வாரம் அவன் ஃபோன் செய்த போது, அவள், அவனிடம் பேசும் போது வெட்கப் பட்டாள், அவனுக்கு அவளிடம் வித்தியாசம் தெரிந்தது. அவள் அக்கறை எடுத்து தன்னை அலங்காரம்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.