(Reading time: 11 - 22 minutes)
Manasa Theevu
Manasa Theevu

மானசாவிற்கும்.

  

ஒரு நாள் தங்கள் தோட்டத்தில் மானசாவும், மாதவனும் ஏகாந்தமாக தோட்டத்து ஊஞ்சலில் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

  

மாதவன் தோளில் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தாள் மானசா.  

  

மாதவன் தன் மனைவி மானசாவின் மடியில் படுத்துக் கொண்டு அவளைத் தன் கண்ணால் பருகிக் கொண்டே, " மானசி, நீ இந்த வயசிலும் எத்தரை சுந்தரமாயிட்டு உண்டு அறியுமோ!" என்று கூறிக் கொண்டிருந்தான்.

  

 அப்போது ஒரு பெரிய சத்தம்,  என்ன என்று அவன் எழுந்து பார்க்கும் முன், அவள், அவன் மேல் சரிந்தாள். “ எண்ட நாயரே!" என்று கூறிக் கொண்டே அவன் மேல் சரிந்தாள்.

  

அவன் கண்ணில் இருந்து கண்ணீர், அவன் அறியாமலேயே வழிந்தது. ஒரு நொடிதான், அவன் உணர்வு இழந்து இருந்தான். பிறகு பெரிய குரல் எடுத்து, " ஸ்டீபன், இவ்விட வரு!" என்று கத்தினான்.

  

அதற்குள்ளாகவே, சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள். அவர்களுடைய படகை ரெடி செய்தான் படகோட்டி.

  

அவளை அள்ளிக் கொண்டு, கொச்சியில் இருக்கும் அவனுடைய மானசா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போனான்.

  

ஸ்டீபன் டீம், அதற்குள்ளாக, தீவை சல்லடை போட்டு தேடினார்கள். ஆள் வந்த படகை தேடினார்கள்.

  

மாதவன், மானசாவை அனைத்தபடி, அவளையே  கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தான்.

  

அவளை அட்மிட் செய்துவிட்டு, டாக்டர், மானசாவை பரிசோதித்து கொண்டிருந்த நேரத்தில், தன் மகன்கள், மகள் என்று எல்லோரையும் கிளம்பி வரக் கூறிவிட்டார் மாதவன்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.