(Reading time: 11 - 22 minutes)
Manasa Theevu
Manasa Theevu

செய்திருந்தாள். பேசும் போது யோசித்து பேசினாள். அவன் வித்தியாசத்தை உணர்ந்தான் பேசி முடிக்கும் போது,  " ரஞ்சி, நீ எப்பவும் போலவே இரு, இன்னிக்கு ஏதோ வித்தியாசமாய் இருக்கிறாய்,எனக்கு நீ எப்பவும் போல நார்மலா பேசு. நான் மருபடியும் அடுத்த வாரம் கூப்பிடுறேன், பை" என்று கூறினான்.

  

நாலு வருடம் கழித்து, சிவரஞ்சனி வணிக மேலாண்மை படிப்பை முடித்து விட்டாள். ஆனந்த பைரவ், எம்பிஏ முடித்துவிட்டு, தங்கள் பிசினஸை அமெரிக்காவிலிருந்து பார்த்துக் கொண்டான். சிவரஞ்சனியின் கடைசி பரிட்சை அன்று காலையில் இந்தியா வந்தான். வந்த அன்று அவன் அப்பா அம்மாவிடம், சிவரஞ்சனியை தான் விரும்புவதாக கூறினான்.

  

சஹானாவிற்கும் அவள் காதலித்த பையனை கல்யாணம் செய்து வைத்தான் மாதவன். அவர்களுக்கு அமெரிக்காவில் வீடு வாங்கிக் கொடுத்தான்.

  

இப்பொழுது தன் பையன் ஆசை படுவது போல், கார்த்திக்கின் மகள் சிவரஞ்சனியையே கல்யாணம் செய்துவிட முடிவு செய்தனர் மானசாவும், மாதவனும்.

  

ஆனந்த் பைரவ, அன்று சிவரஞ்சனியின் கடைசி பரிட்சை முடியும்போது, அவள் காலேஜ் வாசலில் தன் காரோடு காத்திருந்தான்.  மாணவர்கள் வெளியே வரும்போது அவன் காரின் மீது சாய்ந்து நின்றிருந்தான், பெண்கள் எல்லோருமே அவனையே பார்த்து, எவ்வளவு அழானவன், யாருக்காக காத்திருக்கிறான் என்று தங்களுக்குள் மெதுவாக பேசிக் கொண்டு சென்றார்கள்.

  

அவள் வருவது தூரத்திலேயே கண்டுபிடித்து விட்டான், அவன். அவள் அழகு இன்னும் கூடியிருந்தது. வயதுக்கேற்ற முதிர்ச்சியும் அதனால் அழகும் கூடியிருந்தது. அவள் தன் தோழிகளுடன் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவளின் தோழிகள், " வாவ், எத்தரை சுந்தரமான புருஷன், நோக்கியோ?" என்று கூற, அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

  

" ஹேய், சிவா… ஆ ஆள், நின்னையே நோக்கிட்டுண்டு, அவ்விட நோக்கு" என்று கூறவும், அவள் பயந்துக் கொண்டு, மெதுவாக விழி உயர்த்தி பார்க்கவும், அவளுக்கு அதிர்ச்சியான ஆனந்தம். அது அவளின் அத்தான் ஆனந்த் பைரவ.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.