அதுல நிறைய க்வெஸ்டியன்ஸ், கேப்ஸ் இருந்தது.”
“நீ என்ன சொன்னாலும் என்னால அக்ஸப்ட் செய்துக்க முடியலை அக்ஷரா.”
“ஆதி? முதல்ல ப்ரேசெண்டேஷன் முடிக்கலாம். அப்புறமா இதை டிஸ்கஸ் செய்யலாம்.”
“வேண்டாம். உன்னோட எதுவும் செய்ய எனக்குப் பிடிக்கலை. உன் கிளாஸ்மேட்ஸ் சொன்னது சரியா இருக்கு. நீ ஒரு டீம் ப்ளேயர் கிடையாது.”
“ஆதி?”
“எனக்கு எதுவுமே பிடிக்கலை அக்ஷரா. கண்ணைக் கட்டி எங்கேயோ விட்டுட்ட மாதிரி இருக்கு. நீ இப்படி கூடவே இருந்து செய்வேன்னு நான் நினைக்கலை.”
“நான் செய்ததால நல்லது தானே நடந்துச்சு?”
“ரைட்! அது எனக்கு வேண்டாம். நான் போறேன்.”
“பைத்தியமாடா நீ? உன் அக்கா உன்னை நம்பி எவ்வளவு செய்திருக்காங்க? கிடைச்ச வாய்ப்பை வேண்டாம்னு சொல்ற?”
“உண்மை தான். சான்வி எனக்காக செய்தா. நான் அவளுக்கு ஏமாற்றத்தை தான் தரப் போறேன். அதுக்காக கூட நீ செய்ததை சரின்னு ஏத்துக்க மாட்டேன். உனக்கு நாம சம்பிட் செய்த டாபிக் பிடிக்கலைனா என் கிட்ட சொல்லி இருக்கனும். டிஸ்கஸ் செய்திருக்கனும். நீயா எனக்கு தெரியாமல் என் முதுகுக்கு பின்னால செய்தா என்ன அர்த்தம்?”
“ஆதி, நான் உன் கிட்ட சொல்ல ட்ரை செய்தேன்.”
“நான் போறேன் அக்ஷரா! இதுக்கு மேல எனக்கு எதுவும் வேண்டாம். நான் வளர்த்து வச்சிருக்க என்னோட கனவு, ஆசை எல்லாமே தப்பு. அது எனக்கு வேண்டாம். ஒரு சராசரி மனிதனா வாழப் போறேன். குட் பை!”