(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் அப்படி தான்... உங்க ரெண்டு பேரையும் நல்லா கவனிக்கனும் என்பது மதுவோட அன்புக் கட்டளை...”

  

இதுக்கு மேல என்ன கவனிக்க முடியும், உமா? பேசி பேசி சாப்பிட்டதில் எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிட்டாச்சு... லெமன் சோடா கிடைக்குமான்னு தான் பேசிட்டு இருந்தோம்...” என்றாள் பவித்ரா.

  

உங்களுக்கு இல்லாததா, ஒன் செகன்ட் இருங்க...” என்ற உமா, காலியாகும் உணவு வகைகளை நிரப்பும் வேலையில் ஈடுப் பட்டிருந்த ஒருவரை அழைத்து இவர்கள் இருவருக்கும் லெமன் சோடா எடுத்து வரச் சொன்னாள்.

  

அவள் சொன்ன சில நிமிடங்களிலேயே கனாடி டம்ப்ளர்களில் லெமன் சோடா வந்து சேர்ந்தது. ஒன்றை எடுத்து பாரதிக்கு கொடுத்து விட்டு, மற்றொன்றை பவித்ராவிற்கு கொடுக்கும் போது உமாவின் கை நழுவி அந்த கண்ணாடி டம்பளர் கிழே விழுந்தது. விழும் போது, கொஞ்சம் பழச் சாறு பவித்ராவின் சேலையில் பட்டது.

  

அச்சச்சோ... சாரிங்க...” என்று உமா பதறினாள்.

  

ஒன்னும் இல்லை... வாஷ் செய்தால் போயிடும்னு நினைக்கறேன்...” என்றாள் பவித்ரா.

  

என்னோட வீட்டுக்குள்ளே வாங்க... உள்ளே வந்து வாஷ் பண்ணலாம்...” என்றாள் உமா.

  

பவித்ரா, பாரதியையும் அழைத்தாள். ஆனால் பாரதிக்கு வீட்டினுள் செல்ல ஆர்வம் இருக்க வில்லை. எனவே பவித்ராவை மட்டும் சென்று வர சொன்னாள்.

  

உமா வேலை ஆட்களை அழைத்து கீழே இருந்த கண்ணாடி துண்டுகளை சுத்தம் செய்ய சொல்லி விட்டு, பவித்ராவை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.

  

அவர்கள் இருவரும் சென்றதும் தனியாக இருந்த பாரதி, கையில் இருந்த ஜூஸ் அருந்தியபடி மற்றவர்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். பணக்கார வீட்டு விழா என்ற போதும்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.