“நீ ஏன்டா இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்க?” என்றான்.
“அதெல்லாம்... ஒன்னும் இல்லை... எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு...” என்று படபட என்று சொல்லி விட்டு, அங்கிருந்து எழுந்துச் சென்றான் விவேக்.
சில நிமிடங்களில் மதுவும் ஏதோ வேலை இருப்பதாக உள்ளே செல்லவும்,
“என்ன விஷயம் உமா? ஏன் விவேக் ஒரு மாதிரியா இருக்கான்? உனக்கு ஏதோ தெரியும் போல...” என்று மனைவியிடம் விசாரித்தான் நிரஞ்சன்.
“எனக்கு முழுசா எல்லாம் தெரியாது.... ஒரு ஊகம் இருக்கு...” என்றாள் உமா.
“என்ன???”
“உங்க தம்பிக்கு நம்ம மதுவோட லெக்சரர் பாரதி இருக்காங்களே அவங்க மேல ஒரு இது...”
“என்ன???? விவேக்கா??? நம்பவே முடியலையே...”
“ம்ம்ம்... இந்த இது மட்டும் எப்போதும் இப்படி தான்...” என்று சொல்லி சிரித்த உமா,
“அவருக்காக தான் இன்னைக்கு மத்தியானம் பவித்ரா கிட்ட நியூஸ் கலெக்ட் செய்தேன்...” என்றாள்.
“ஆனால், இந்த விஷயம் உனக்கு எப்படித் தெரியும் உமா?”
“பவித்ரா சொன்னது தான்...” விவேக் பாரதியிடம் திருமணம் செய்துக் கொள்ள கேட்டதை பவித்ரா மூலமாக அறிந்ததை கணவனிடம் சொன்னாள் உமா.
“அது நிஜமா இருக்கனும்னு இல்லையே...” என்றான் நிரஞ்சன் சந்தேகத்துடன்.