(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இல்லைங்க, பவித்ரா பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... அதுவும் பாரதி அக்ஸப்ட் செய்துக்கலைன்னு தானே சொன்னாங்க... அதை எதுக்கு அவங்க சும்மா சொல்லனும்?

  

ம்ம்ம்... ஆனால் உமா, இந்த விஷயத்தில் எல்லாம் நீ ரொம்ப இன்வால்வ் ஆகாதே...”

  

உமாவின் முகத்தில் கேள்வி ரேகை தோன்றியது.

  

இது அவங்க பர்சனல் விஷயம்... நாம தலைப் போடுறது நல்லா இருக்காது... ஹெல்ப் வேணும்னு கேட்டால் பரவாயில்லை...”

  

தெரியும்ங்க... அதனால் தான் நான் டைரெக்டா இன்வால்வ் ஆகலை... ஏதோ ராமருக்கு அணில் செய்த உதவி போல கொஞ்சமா செய்றேன்...” என்றாள் உமா புன்னகையோடு.

  

************

  

ஞாயிறு காலை... சமையலறையில் வேலையில் ஈடுபட்டிருந்த பவித்ராவை தேடி வந்தாள் பாரதி. முன்தினம் அவர்கள் இருவரும் மாலில் விண்டோ ஷாப்பிங் செய்து விட்டு நேராக பவித்ராவின் வீட்டிற்கு வந்தார்கள். மற்ற வார இறுதி நாட்கள் போலவே பாரதி அன்றிரவு பவித்ரா வீட்டில் தங்கி விட்டு, ஞாயிறு மதியம் விடுதி செல்வதாக திட்டம். 

  

"ஹேய் பவி... இன்னைக்கு உன் சமையலா? அம்மா எங்கே? அம்மா சமையல் சாப்பிடலாம்னு நினைச்சேன்..." என்று வேண்டுமென்றே தோழியை வம்பு செய்தாள் பாரதி!

  

"சொல்லுவீங்க மேடம், ஏன் சொல்ல மாட்டீங்க... என்னை ஏதாவது சொல்லாமல் உன்னால இருக்க முடியாதே..." என்றாள் பவித்ரா!

  

"ப்ச்... அம்மா எங்கே பவி? அதை சொல்லு..." 

  

"வேற எங்கே... அவங்களுடைய சீமந்த தத்துப் புத்திரிக்கு சீக்கிரம் புத்தி சரியாகி கல்யாணம்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.