(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"ஓ! அது தானா விஷயம்... சிஸ்டர், உங்க ஃப்ரெண்டைப் பத்தி என்னை விட உங்களுக்குத் தான் நல்லா தெரியும்… பட் ஸ்டில் சொல்றேன்... அவங்க கிட்ட நீங்க முடிந்த அளவு என்னைப் பத்திப் பேசுவதைத் தவிர்த்தால் தான் கொஞ்சம் சீக்கிரமே எங்க கல்யாணம் நடக்கும்."

  

"அதைப் பத்தி இனிமேல் கவலைப் படாதீங்க, மிஸ்டர் விவேக். நான் ஏற்கனவே இவள் கிட்ட சொல்லி வச்சிருக்கேன். இந்த நியுஸ் கேள்வி பட்டதால தான் உங்களை பத்தி விசாரிச்சது..."

  

"கெஸ் செய்தேன், ரமேஷ்... ப்ளீஸ் என்னை இப்படி மிஸ்டர் போட்டு கூப்பிடாதீங்க... வெறும் விவேக்குன்னு கூப்பிடுங்க..."

  

"அது எப்படி? ஒரு மரியாதைக்கு அப்படி சொன்னா தான் சரியா இருக்கும்..."

  

"என்ன மரியாதை சொல்லுங்க? நான் ஒன்னும் உங்களை விடப் பெரியவன் இல்லை. நம்ம ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு தான் இருக்கும். என் குடும்பத்திற்காக என்றால் நீங்க மரியாதை தர வேண்டியது என் அம்மாக்கும் அப்பாவிற்கும் தான்... குடும்ப ஸ்டேடஸ்க்காக என்றால், நான் இன்னும் எதையுமே செய்யலையே? அப்பா சம்பாதித்த பணத்தை கட்டி காப்பாத்துறேன்.... சோ ப்ளீஸ் மிஸ்டர் எல்லாம் வேண்டாம்..."

  

"கட்டாயமா விவேக்... உங்க பேச்சில் இருந்தே உங்கப் பெருந்தன்மை புரியுது... பாரதிக்கு நல்ல வாழக்கை அமைவதில் எங்க எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்...."

  

"ஆமாம் தம்பி, என் மகன் சொல்றது சரி தான். உங்கப் பேச்சிலேயே உங்க நல்ல குணம் தெரியுது... ஆனால் எல்லாவற்றையும் சம்பிரதாயப் படி செய்வது தான் சரி... நான் பாரதி கிட்டப் பேசுறேன்.. நீங்க உங்க அம்மா அப்பா கிட்ட பேசி ஒரு நல்ல நாள் பார்த்து அழைச்சிட்டு வாங்க...." என்றாள் கமலா.

  

"நீங்க சொல்றது சரி, அம்மா... ஆனால் அதில் ஒரு சின்ன பிரச்சனை..." என்றான் விவேக்!

  

மூவரும் அவனை கேள்வியாய் பார்க்க, 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.