(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"எங்க வீட்டில பிரச்சனை இல்லை.... அண்ணிக்கு விஷயம் ஓரளவிற்கு தெரியும்... அம்மாவும் எனக்கு பிடிச்சப் பொண்ணைக் கண்டுப் பிடிக்கிற வரை வெயிட் செய்றேன்னு சொல்லிட்டாங்க... அப்பா பாரதி போல் ஓரு பொண்ணை வேண்டாம்னு சொல்லவே மாட்டார். ஆனால் பாரதி விஷயம் மட்டும் சந்தேகம் தான்...." என்றான் விவேக்.

  

"எனக்கு புரியுது, தம்பி... நான் பாரதி கிட்டப் பேசுறேன்... நான் சொன்னால் அவள் கேட்பாள்..." என்றாள் கமலா அவனை தேற்றும் விதத்தில்.

  

"தெரியும் அம்மா... ஆனால், நான் நேரா பாரதி கிட்டப் பேசாமல் உங்க கிட்ட வந்து பேசின விஷயம் தெரியும் போது, அவங்க எப்படி ரியாக்ட் செய்வாங்கன்னு தெரியலை... அதுவும் இல்லாமல் பாரதி கலயாணத்திற்கு சம்மதம் என்பதை என்கிட்டே நேரா சொல்லனும்னு எனக்கு ஒரு ஆசை..."

  

"புரியுது சார்..." என்றாள் பவித்ரா. அவளுக்கு இது முன்பே தெரிந்த விஷயம் தானே!

  

"அம்மா, ரமேஷ், உங்களுக்கு இதுல ஏதாவது சந்தேகம்???"

  

"என்ன விவேக், இப்படி ஒரு கேள்வி? பாரதிக்கு நல்ல வாழ்வு கிடைச்சா என்னை விட ரொம்ப சந்தோஷப் படறவங்க என் அம்மாவும், மனைவியும் தான்... தங்கையா நான் நினைக்குற பாரதிக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா எங்க எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம் தான்..."

  

"ஆமாம் தம்பி... நீயே பாரதி கிட்டப் பேசி அவ சம்மதம் வாங்க முயற்சி செஞ்சுப் பார்... சரியா வரலைனா கவலையே படாதே... என்கிட்டே சொல்லு... நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன்..."

  

"தேங்க்ஸ் அம்மா... தேங்க்ஸ் ரமேஷ்.... உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்..."

  

"போதும் விவேக், கொஞ்சம் நன்றியை மீதி வைங்க... நல்ல விஷயம் பேசி இருக்கோம்... ஸ்வீட் சாப்பிடனுமே... பவித்ரா, ஏதாவது ஸ்வீட் இருந்தால் எடுத்துட்டு வாயேன்...." மனைவி பக்கம் திரும்பி சொல்லி விட்டு மற்றவர்க்கு தெரியாது அவளைப் பார்த்து உல்லாசமாக

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.