(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"என்ன அத்தை, நீங்க இப்படி?"

  

"ஹலோ, எப்படி இருக்கீங்க?" உமாவின் குரலின் நடுவில் கேட்ட பாரதியின் குரலில், இருவரும் அந்த பக்கம் பார்த்தனர்.

  

பாரதியும் மதுவும் நின்றிருந்தனர். அப்படி இவளிடம் என்ன சிறப்பு என்று மனதில் நினைத்த படி கற்பகம் அமைதியாக இருக்கவும்,

  

"பாரதி, நல்லா இருக்கோம்... நீங்க எப்படி இருக்கீங்க? காருக்கு என்ன?"

  

"நல்லா இருக்கேன்... காரில் ஏதோ ரிப்பேர் போல இருக்கு... நீங்க எப்படி இருக்கீங்க மேடம்?"

  

ரொம்பவே இயல்பாக கேட்கப்பட்ட அந்த கேள்வியில், கற்பகம் மீண்டும் ஒருமுறை பாரதியை உற்றுக் கவனித்தாள், பின்,

  

"நல்லா இருக்கேன்... வெளியே கிளம்பும் போது கார் மக்கர் செய்தால் கஷ்டம் தான்..." என்றாள்.

  

"ஆமாம் மேடம், பவி பேமிலி மகாபலிபுரம் போகலாம்னு பிளான் செய்து என்னையும் கூப்பிட்டாங்க, சரி சும்மா ஹாஸ்டல்ல இருந்து போர் அடிக்கும்னு கிளம்பினேன்..."

  

அங்கே நிரஞ்சன், விவேக், ரமேஷ் இடையே நடக்கும் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த மது,

  

"மேம், நாங்களும் மகாபலிபுரம் தான் போறோம், நீங்களும் எங்க கூடவே வாங்க... அண்ணா அதை தான் பேசிட்டு இருக்காங்க..." என்றாள்.

  

பாரதியின் முகத்தில் மெல்லிய தயக்கம் பரவியது. கற்பகம், உமாவை, பொதுவாக பார்த்து,

  

"ஒரு நிமிஷம் பவி கிட்ட பேசிட்டு வரேன்..." என்று சொல்லி விட்டு அங்கே இருந்து நகர்ந்தாள்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.