(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 20 - பிந்து வினோத்

20. என்னை தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன்...

  

திட்டமிட்டது போலவே காலையில் ரமேஷ் - பவித்ரா குடும்பத்துடன் பாரதியும் சேர்ந்து காரில் மகாபலிபுரம் நோக்கி பயணத்தை தொடங்கினார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் கார் சீராக சென்றுக் கொண்டிருக்க, பாரதியை அப்போது தான் கூர்ந்து கவனித்த பவித்ரா,

  

"என்ன பாரு, ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்றாள் மெல்லிய குரலில்.

  

பாரதி எவ்வளவு தடுத்தும் கேளாது, தோழிக்காக என்று பவித்ரா பின் சீட்டில் இருக்க, கமலா, குழந்தையுடன், முன் சீட்டில் இருந்தாள். காரில் ஏதோ தமிழ் திரைப்பட பாடல் அலறிக் கொண்டிருந்தது.

  

"ப்ச்... ஒண்ணுமில்லை பவி..." என்றாள் பாரதி அதே போன்ற மெல்லிய குரலில்.

  

"இப்போ எல்லாம் நீ முன் போல என்கிட்டே எதையும் சொல்றதில்லை..."

  

"அப்படி எல்லாம் இல்லை பவி... உன்கிட்ட நிறைய பேசணும்... எனக்கு ஒரே குழப்பமா இருக்கு, மகாபலிபுரம் போன பிறகு நேரம் கிடைக்கும் போது பேசுவோம்..."

  

"சரி... ஆனால் இப்போதே பேசணும்னா சொல்லு, ஏதாவது காரணம் கண்டுபிடித்து காரை நிறுத்த சொல்றேன்...."

  

பவித்ராவின் அன்பில் நெகிழ்ந்தவளாக, தோழியின் வலக் கரத்தை பிடித்த படி,

  

"அதெல்லாம் வேண்டாம் பவி, மெதுவா பேசலாம்..." என்றாள் பாரதி.

  

திடீரென கார் சடன் ப்ரேக் போட்டது போல் நின்றது... என்ன என்ன என்று அனைவரும் கேட்கவும்,

  

"தெரியலை பார்க்கிறேன்..." என்றான் ரமேஷ்.

  

ப்போதும் டிரைவர் வேண்டாம் என்று சொல்லும் விவேக், அன்று டிரைவரை வர

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.