சான்விக்கு விவேக்கின் பார்வையும் கருத்தில் பதிந்தது. அந்த பார்வையில் கலந்து இருந்த ஆவலும் கவனத்தில் பதிந்தது.
அவளுக்கு ஆர்வமோ படபடப்போ இப்போது எழவில்லை. மாறாக எப்போதும் இருக்கும் எச்சரிக்கை உணர்வு விழித்துக் கொண்டது.
அதற்காக அவள் விவேக்கை கெட்டவன் என்றும் நினைக்கவில்லை. அவனை அப்படி கெட்டவன் என்று யோசிக்க அவளுக்கு எந்த அவசியமும் ஏற்பட்டு இருக்கவில்லை.
ஆனால் ஒரு விஷயம் தெளிவாக அவளுக்குப் புரிந்தது.
விவேக் பணக்காரன்.
ஆதித்யாவின் கனவு என்றாலும் கூட, அவன் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய சான்வி அவளின் மொத்த சேமிப்பையும் காலி செய்ய வேண்டி இருந்தது. ஆனால் விவேக் ஒன்றிரண்டு நாட்களில் திட்டம் போட்டு ஈசியாக தங்கையுடன் இந்தியாவிற்கு வந்து விட்டான்.
இப்படி அவளுக்கும் விவேக்கிற்கும் நடுவே இருந்த வசதி சம்மந்தப் பட்ட ஏற்ற தாழ்வு தான் சான்வியின் மனதில் அப்போது எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி இருந்தது.
இதை எல்லாம் யோசித்தப் படி மீண்டும் கவனத்தை விவேக், ஆதி, அக்ஷரா பக்கம் செலுத்தினாள்.
அங்கே ஆதித்யாவும் அக்ஷராவும் விவேக்கை நடுவே வைத்து அவனிடம் பேசுவதாக காண்பித்துக் கொண்டு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"பத்து மணிக்கு வர முடியுமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு விவேக். நமக்கு ஜெட் லாக் இருக்காது?" என அக்ஷரா கேட்க, விவேக் தலையை ஆட்டினான்.
எனினும் அவன் வாய் திறந்துப் பேசும் முன்பு ஆதி, "ஸ்பெசிபிக் டைம்ல மீட் செய்யனும்,
Yash has written more than 1 Tamil series in Chillzee and One Novel in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.