(Reading time: 5 - 9 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

போனை எடுப்பதுப் போல சான்வியை விட்டு கொஞ்சம் தள்ளி நடக்கத் தொடங்கினான்.

  

அவன் ஒன்றும் வேண்டுமென்றே அவள் மேலே எல்லாம் வந்து விழவில்லை என்பது சான்விக்கு தெரியும்! இப்போது அவன் இடைவெளி கொடுத்து நடக்கவும் அவளின் மனம் குறுகுறுத்தது. அவளின் பார்வையை விவேக் தப்பாக நினைத்துக் கொண்டானா என்ற கேள்வி உடனே அக்ஷ்ராவிடம், "கோபம் எல்லாம் கிடையாது. வருத்தம் இருந்தது. தப்பு ஆதி மேலன்னு எனக்குத் தெரியும்," என்றாள்.

  

அக்ஷரா தாயின் கையை குதூகலத்துடன் பற்றிக் கொள்ளும் குழந்தையைப் போல இன்னும் உற்சாகத்துடன் சான்வியின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

  

"தாங்க்ஸ். நீங்க மட்டும் தான் ஸ்மார்ட். உங்களுக்கு எப்படி இப்படி ஒரு புண்ணாக்கு தம்பி?"

  

சான்வி அவளை ஆச்சர்யம் பொங்கப் பார்த்தாள்.

  

"என்ன இந்த மாதிரி லாங்வெஜ் எல்லாம் பேசுற?"

  

"என்னோட நிறைய தமிழ் பசங்க படிக்குறாங்க. அமெரிக்கன் இங்கிலீஷ் பின்னி எடுப்பாங்க. அப்பப்போ தமிழ்லேயும் கலக்குவாங்க."

  

"பயங்கரமா கலக்குவாங்க போலருக்கு. நல்லாவே தெரியுது."

  

"எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க என் அக்காவா இருந்திருக்கலாம். உங்க கொடா போன்ல பார்த்து பேசினப்போ ஒன்னும் தெரியலை. இப்போ நேருல பார்த்ததும் அவன் மேல பொறாமையா இருக்கு." அக்ஷரா ஆதித்யாவை கையை நீட்டி காண்பித்து சொன்னாள்.

  

சான்வி என்ன சொல்வது என்று தெரியாமல் அக்ஷராவைப் பார்த்து ஸ்மைல் செய்தாள்.

  

அடுத்து, எதற்கு என்றே தெரியாமல் விவேக் பக்கம் பார்த்தாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.