(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"ஹலோ விவேக்! என்ன இந்த நேரத்தில்? ஆஃபிஸ் போகலையா நீங்க?" என்றாள்.

  

பாரதி இயல்பாக அவனின் பெயரை உச்சரிப்பதைக் கேட்டு மனதில் மகிழ்ச்சி அடைந்த விவேக், அதை வெளியில் காட்டாது,

  

"ஆஃபிஸில் இருந்து தான் வரேன், பாரதி. இங்கே பக்கத்தில் பிரீஸ் பேரடைஸ் இருக்கு தெரியுமா? அங்கே ஒரு அஃபிஷியல் மீட்டிங், முடித்து விட்டு வரும் போது, உங்க நினைவு வந்தது, சரி நீங்க இருந்தால், மீட் செய்யலாம்னு வந்தேன்." என்றான் விவேக்.

  

"ஓ... மீட்டிங் எல்லாம் எப்படிப் போச்சு?"

  

"நல்லா தான் போச்சு. ஆமாம், நீங்க லஞ்ச் சாப்பிட்டாச்சா?"

  

"இல்லையே, மணி இன்னமும் பன்னிரெண்டு கூட ஆகலையே!"

  

"வழக்கம் போல கோபப் படாதீங்க. உங்களுக்குப் பிடிக்கலைனா நேரா சொல்லிடுங்க. நான் வெளியே தான் சாப்பிடனும், நீங்களும் வரீங்களா? இல்லைன்னா நான் மட்டும் தனியா சாப்பிடனும்."

  

அவன் பேச்சின் முன் பாதியினாலோ, அல்லது அவன் இறுதியில் சொன்ன தனிமை என்னும் வார்த்தையினாலோ, பாரதிக்கு மறுக்க மனம் வரவில்லை. தனியாக அமர்ந்து உணவு உண்பது என்பது எத்தனை கொடுமை என்பது அவளுக்கும் தெரியுமே.

  

"சரி, போகலாம். என் லன்ச்சை வாட்ச்மேனுக்கு கொடுக்க சொல்றேன். ஆனால் நீங்க கொஞ்சம் நேரம் காத்திருக்கனுமே, நான் போய் ரெடியாகி வரனும்!" என்றாள் பாரதி!

  

"வாட்? ரெடி ஆகணுமா? இப்போதே நீங்க மிஸ் இந்தியா ரேஞ்சுக்கு தான் இருக்கீங்க, அப்புறம் என்ன?"

  

முதல் முறையாக, விவேக்கின் பேச்சை இயல்பாக ஏற்று,

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.