(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"மிஸ் யூனிவேர்ஸ் ரேஞ்சுக்கு மாற தான்! ஒரு அரை மணி நேரம் ஆகும் பரவாயில்லையா?" எனக் கேட்டாள் பாரதி புன்னகை மின்ன!

  

"கட்டாயமாக! அரை மணி நேரத்தில் மிஸ் இந்தியா, யுனிவெர்ஸாக மாறும் அதிசயத்தை நானும் பார்க்கணும் தானே?"

  

சிரித்து விட்டு அங்கிருந்து சென்றாள் பாரதி.

   

வள் மாடி ஏறி செல்லும் வரை பார்த்திருந்த விவேக், பின் பார்வையை சாலை பக்கம் திருப்பினான். அங்கேயே நின்று வேடிக்கைப் பார்த்தபடி, நேரத்தை கழிக்க முயன்றான். என்ன தான் பாரதிக்காக காத்திருந்தப் போதும், அரை மணி நேரத்தை ஒன்றும் செய்யாமல் செலவிடுவது அவனுக்கு கஷ்டமாகவே இருந்தது. காதலிக்காக மணிக் கணக்கில் காத்திருப்பவர்களை நினைத்து ஆச்சர்யப் பட்டான்...

   

பாரதி வர நாற்பது நிமிடங்களுக்கும் மேலானது!

  

ஒருவழியாக வந்தவள், வரும் வழியில் நின்றிருந்த ஒரு பெண்மணியிடம் நின்றுப் பேசவும், அவளை கவனிக்க விவேக்கிற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பார்த்தவன், அசந்துப் போனான்.

   

மயில் கழுத்து வண்ண சிந்தடிக் புடவையில் தேவதையாக காட்சி அளித்தாள் பாரதி. கழுத்தில் சிறிய முத்துக்களைக் கொண்ட மாலை வேறு அணிந்திருந்தாள். மற்ற நாட்கள் போல் இல்லாது அவள் அன்று கொஞ்சம் கூடுதலாகவே அலங்காரம் செய்திருந்தது அவனுக்கே புரிந்தது. அதற்காக அவள் எதையுமே அளவுக்கு அதிகமாகவும் செய்யவில்லை. கண்களில் மை, நெற்றியில் சிறிய பொட்டு, காதுகளில் சின்ன ஜிமுக்கி.

  

விவேக் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பாரதி அவளின் ட்ரேட்மார்க் சின்னப் புன்னகையுடன் அவனை நோக்கி வந்தாள். விவேக்கின் பார்வையில் தெரிந்தப் பாராட்டில் அவளுக்கு உச்சி குளிர்ந்துப் போனது. பல வருடங்களுக்குப் பின் முதல் முறையாக அவள் அன்று தான் கொஞ்சம் சிரத்தை எடுத்து அலங்காரம் செய்துக்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.