(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“புரிஞ்சுக்கோ சத்யா.”

  

வீட்டினுள் இருந்து எட்டிப் பார்த்த அவர்களின் மகள் ஷாலினி,

  

“சண்டைப் போடுறீங்களா?” என்றாள் ஆர்வத்துடன்.

  

“ஷாலினி, போ, போய் படி,” என மகளிடம் தென்றல்வாணன் பேசிய போது கிடைத்த சின்ன கேப்பை பயன்படுத்தி அங்கிருந்து நழுவி ரோட்டிற்கு வந்தாள் சத்யா.

  

அங்கே சக்தி ஜீப்பின் டிரைவர் சீட்டில் அமர்ந்தப் படி மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

  

ஜீப்பின் பக்கத்தில் போய் மீண்டும் அவளிடம் பேச்சை ஆரம்பித்தாள் சத்யா.

  

“அடுத்து எந்த வீட்டுக்கு போறதுன்னு தேடுறீங்களா சக்தி?”

  

கண்களை மட்டும் உயர்த்தி சத்யாவைப் பார்த்த சக்தி, ஆம் என்று அர்த்தம் கொள்ளும் விதத்தில் தலையை ஆட்டினாள்.

  

“உங்களுக்கு அந்த வேலையே வேண்டாம். நான் ஹெல்ப் செய்றேன்.”

  

இப்போது முகத்தை நிமிர்த்திப் பார்த்த சக்தி,

  

“எனக்கு ஹெல்ப் செய்யனும்னு நினைக்குறதுக்கு தேங்க்ஸ். ஆனா உங்க ஹஸ்பன்ட் யோசிக்குறதுக்கு காரணம் இருக்கு. நான் வேற வீடு தேடிப்பேன் கவலைப் படாதீங்க,” என்றாள்.

  

“அவர் வீட்டை விட்டுத் தள்ளுங்க. உங்களுக்கு நான் வேற ஒரு வீடு சொல்றேன். பெரிய வீடு. பத்து பதினஞ்சு வருஷமா காலியா இருக்கு.“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.