(Reading time: 6 - 11 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

என்றாள் சக்தி!

  

அவனிடம் கை அசைத்து விடைப் பெற்று இரண்டு பெண்களும் நடந்தார்கள்.

  

இளவேனிற்கால காற்று அவர்கள் இருவரையும் தீண்டி தழுவிச் சென்றது.

  

இரண்டு வருடமாக அதே ஊரில் வாழ்ந்து பழகிப் போனதால் சத்யா கண்டுக்கொள்ளாமல் நடந்தாள். சக்தி கைகளை தேய்த்துக் கொண்டு நடந்தாள்.

  

“சென்னையில இருந்து வந்திருக்கீங்க. கிளைமேட் செட் ஆக டைம் ஆகும். மதியம் சூடா இருக்கும், சாயங்காலம் நல்லா குளிரும்.”

  

சத்யா சொல்ல, சக்தி ஒன்றும் சொல்லாமல் நடந்தாள்.

  

ஐந்து நிமிடத்தில் ஒரு பெரிய காம்பவுண்ட் கண்ணில் பட்டது.

  

"இது தான் நான் சொன்ன வீடு. இங்கே இருந்த டாக்டர், அவரோட, மனைவி, மகன் மூணுப் பேரும் ஒரு நாள் திடீர்னு காணாமப் போயிட்டாங்க. அப்போ இருந்தே இப்போ இருக்க பாட்டி தான் வீட்டை கவனிச்சுட்டு இருந்தாங்க. டாக்டர் குடும்பம் என்னைக்காவது வருவாங்கன்னு இவங்க இப்போவும் நம்பிக்கையோட இருக்காங்க.”

  

“போலீஸ் எதுவும் கண்டுப்பிடிக்கலையா?”

  

“ஹுஹூம்... உங்க பாஷையில சொன்னா, எந்த முடிவுக்கும் வர சாலிட் எவிடென்ஸ் இல்லையாம். வீடு பிடிச்சிருந்தா, இங்கே வந்தப்புறம் பாட்டி கிட்ட பேச்சு கொடுத்துப் பாருங்க, கதை, கதையா சொல்வாங்க.”

  

காம்பவுன்டின் நடுவே இருந்த பெரிய கேட்டின் தாழ்ப்பாளை தட்டினாள் சத்யா.

  

சக்தி வீட்டை நோட்டமிட்டுக் கொண்டே நின்றிருந்தாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.