விடிகாலை 3 மணிக்கு வெற்றிசெல்வனின் செல்போன் ஒலித்துக் கொண்டேயிருக்க அதை எடுக்காமல் உறங்கிக் கொண்டிருந்தான் வெற்றி. அவனுடன் ஒட்டிப் படுத்திருந்தவளுக்கு அந்த செல்போன் சத்தம் கேட்டு உறக்கம் கலைந்து சட்டென விழிப்பு வரவே கண்கள் திறந்து மலங்க மலங்க பார்த்தாள்.
அவளின் முகத்திற்கு அருகிலேயே வெற்றியின் முகம் இருக்கவும் சட்டென அவனைவிட்டு விலக முயற்சித்து போதுதான் கவனித்தாள். அவனது கை மற்றும் கால் தன் உடல்மீது படர்ந்திருப்பதும் அவன் சட்டையில்லாமல் தன்னை மிகவும் நெருக்கமாக அணைத்துக் கொண்டிருப்பதும் கண்டு விக்கித்து போனாள்.
அந்நொடியில் அவளது குளிர்ஜுரமே காணாமல் போய்விட்டது. அவள் பதட்டமாகி அவனிடம் இருந்து விடுபட முயன்று அசைந்தாள். வெற்றியோ தூக்க கலக்கத்தில் அவளை இன்னும் நெருக்கமாக பிடித்து தன்னுடன் இழுத்து அணைத்துக் கொள்ள அவளுக்கு குப்பென வேர்த்துக் கொட்டியது. கஷ்டப்பட்டு அவனது பிடியில் இருந்து தன் ஒரு கையை விடுவித்தவள் அவனது தோளை பிடித்து உலுக்கி, தள்ளி, அடித்து என அனைத்தும் செய்ய ஒருவழியாக உறக்கம் கலைந்து கண்விழித்தான் வெற்றி.
கண்கள் திறந்தவன் தன் பக்கத்தில் இருந்தவள் விழித்திருப்பதையும் அவள் பயந்து பயந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டு குழந்தை போல சிரித்து வைத்தான். அவனது சிரிப்பைக் கண்டு பயம் இன்னும் அதிகமாக அவனிடம் இருந்து விலகி எழ முயன்றவளை பிடித்து இழுத்தான்
”என்னை விடுங்க” என்றாள்
”ப்பா உன் குரல் கேட்டு எத்தனை நாள் ஆச்சி”
“நாளா”
“ஆமாம் நீ வந்த நாள்ல இருந்தே காய்ச்சல்ல படுத்த படுக்கையா இருந்த நான்தான் உன்னை பத்திரமா பார்த்துக்கிட்டேன்”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.