அவரவர்கள் ஓய்ந்து போய் அமர்ந்த சமயம் மெதுவாக வீட்டுக்குள் வந்த வெற்றி நேராக தன் தாய் செண்பாவிடம்
”அம்மா” என்றான் அன்பாக
”எங்கடா போன எங்கெல்லாம் தேடறது உன்னை, சொல்லிட்டு போக மாட்டியா” என அவளது தோளில் 2 அடிகள் தர பொய்யாக கத்தினான்
“ஆ வலிக்குது வலிக்குது, அம்மா என்னம்மா நீ இன்னிக்கு எனக்கு கல்யாணம் என்னை அடிக்கறியே, நானே கல்யாணம் பண்ணி பொண்டாட்டிக்கிட்ட கஷ்டத்தை அனுபவிச்சி அவள் தர்ற அடி உதை வாங்கனுமான்னு பயந்து போய் இருக்கேன், இதுல நீயுமா என்னை அடிக்கறது”
“அடப்பாவி ஏன்டா இப்படி பேசற, உன் பொண்டாட்டி ஏன் உன்னை அடிக்கப்போறா நீ அவளை அடிக்காம இருந்தா சரி”
“அம்மா நான் இந்த ஊரு பையன், என்னால எப்படி ஒரு பொண்ணை அடிக்க முடியும் சொல்லு, நீ என்னை அப்படியா வளர்த்திருக்க”
“டேய் போதும்டா, பொண்ணுங்க பேசற வசனமெல்லாம் நீ பேசாத, வாடா முதல்ல உனக்கு நலுங்கு வைச்சி குளிப்பாட்டனும் வா” என வெற்றியை அழைத்துக் கொண்டு கொல்லைப்புறம் செல்ல அங்கு மிருதுளா இருக்கவும்
”ஏய் நீ இங்க என்ன பண்ற” என வெற்றி கேட்கவும்
”உனக்கு நலுங்கு வைச்சி குளிப்பாட்டி கல்யாணத்துக்கு ரெடி பண்ண வந்திருக்கேன்”
“அய்யோ நீயா வேணாம் போடி இங்கிருந்து நான் உனக்கு என் உடம்பை காட்டமாட்டேன் போடி வெளிய”
“டேய் நிறுத்துடா முடியலை என்னால, அப்படியே நீ பெரிய மன்மதன் பாரு சட்டையை
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.