(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

கீழே இருந்த பாலை எடுத்துக் கொண்டு எதிரே பார்வையை செலுத்தினான் அபினவ்.

  

அங்கே முப்பது முப்பத்தி ஐந்து வயது மதிக்கத் தக்க பெண் ஒருத்தி நின்று இந்த வீட்டை பார்த்தப்படி இருந்தாள்.

  

பசங்க பயந்தது இவளைப் பார்த்தா!!

  

கையிலிருந்த பாலை ஆவலுடன் வெளியே நின்றுக் கொண்டிருந்த சிறுவர்களிடம் வீசினான் அபினவ்.

  

நன்றி சொல்லலாம் என்று மீண்டும் கிரில் கதவுப் பக்கம் பார்த்தான். அஹல்யாவின் மகனும் அவனின் நாய் குட்டியும் மட்டும் தான் நின்றிருந்தார்கள்,.

  

அந்த சிறுவனும் அபினவை பார்க்காமல் தெருவில் மீண்டும் விளையாட தொடங்கி இருந்த சிறுவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

  

“ஹாய், உன் பேரென்ன?” அபினவின் கேள்வி காதில் விழவும், அபினவைப் பார்த்தான் அந்த சிறுவன்.

  

“என் கிட்டேயா கேட்டீங்க?” அவனின் பேச்சில் இருந்த அப்பாவித்தனமும் இனிமையும் அபினவிற்கு பிடித்திருந்தது.

  

“உன்னை தான். உன் பேரு என்ன?”

  

“அருண்.”

  

“உன் நாய் குட்டி பேரு என்ன அருண்?”

  

“சீசர்.”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.