(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“க்யூட் பப்பி! நீ விளையாடப் போகலையா அருண்?”

  

“நானும் சீசரும் விளையாடிட்டு இருந்தோம்.”

  

“ஏன் சீசர் கூட விளையாடுற? எல்லோரும் கிரிக்கெட் விளையாடுறாங்களே. நீயும் விளையாட வேண்டியது தானே? உனக்கு கிரிக்கெட் பிடிக்காதா??”

  

“ரொம்ப பிடிக்கும். என்னை சேர்த்துக்க மாட்டாங்க.”

  

“யாரு சொன்னது? நீ வா நான் அவங்க கிட்ட சொல்றேன்.”

  

அபினவ் சொல்லி வாயை மூடும் முன், க்ரில் கதவின் தாழ்ப்பாளை எம்பி திறந்து வெளியே வந்து நின்றான் அருண். அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.

  

நண்பன் தன்னை விட்டு வந்த சோகத்தில் சீசர் கீச் கீச் என்று கத்த, உள்ளே இருந்து அஹல்யாவின் குரல் “அருண்!” என்று அழைத்தது.

  

“என்னோட தான் இருக்கான். பசங்க கூட விளையாட ஆசைப்படுறான்,” என்று சத்தமாக பதில் கொடுத்தான் அபினவ்.

  

அஹல்யா அனுமதி கொடுக்க காத்திருக்காமல், அருணை திருப்திப் படுத்துவதற்காக அவனை அழைத்துக் கொண்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் அழைத்துப் போனான்.

  

“இவனையும் விளையாட்டுல சேர்த்துக்கோங்க.”

  

விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றார்கள்.

  

“என்ன பசங்களா? ஏதாவது ஒரு டீம்ல சேர்த்துக்கோங்க. உங்க கூட விளையாட

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.