(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

கொடுத்தான்.

  

“உங்களுக்கும் தாகம் எடுக்கும்னு அம்மா கொடுக்க சொன்னாங்க.”

  

“தேங்க் யூ.”

  

அபினவ் பாட்டிலில் இருந்த நீரைப் பருகினான். சில்லென்ற தண்ணீர் தொண்டைக்குள் சென்றது இதமாக தான் இருந்தது.

  

வாட்டர் பாட்டிலை அருணிடம் கொடுக்காமல், க்ரில் கதவிடம் நின்ற அஹல்யாவிடம் போய் கொடுத்தான்.

  

“தேங்க் யூ!”

  

அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் கொடுத்த பாட்டிலை வாங்கிக் கொண்டாள்.

  

“பாவம் அருண்! விளையாட ரொம்ப ஏங்கி இருப்பான் போல இருக்கு. அவனோட அப்பா ரொம்ப பிஸியானவரா?”

  

உடன் பதில் சொல்லாமல், என்ன பதில் சொல்வது, இவனிடம் சொல்லலாமா என்பது போல பார்வையால் அவனை அளவிட்ட அஹல்யா,

  

“அருணுக்கு அப்பா இல்லை. ஐ மீன், இங்கே இல்லை. ஐ ஆம் அ டிவோர்ஸி,” என்றாள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல்.

  

“என்ன?”

  

விவாகரத்தானவள் என்றா சொன்னாள்?

  

இவளை போய் ஒருவன் விவாகரத்து செய்வானா??? அவனை விட முட்டாள் இருக்க முடியுமா??

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.