(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

எவ்வளவோ பேரு சாதாரணமா நம்ம கூட இப்போவும் நடமாடிட்டு தான் இருப்பாங்க.

  

அஹல்யா முகத்தை வச்சு நல்லவ கெட்டவன்னு சொல்ல முடியாது. உங்க மனசு வேற பூ மாதிரி இருக்கு. அதிர்ச்சி எல்லாம் தாங்கும்னு எனக்குத் தோணலை. உங்க ஹஸ்பன்ட்க்கு வேற இதெல்லாம் பிடிக்காது. ஸோ, யோசிங்க!” என்றாள்.

  

“என்ன சொல்றதுன்னு தெரியலை சக்தி. இப்படி கண்டுப்பிடிக்குற வேலை எல்லாம் நான் நினைச்ச மாதிரி ஈசியா இருக்காதுன்னு புரியுது.”

  

“ஈசியா இருந்தா எல்லோருமே துப்பறியும் நிபுணரா இருந்திருப்பாங்களே! சரி, சத்யா, இப்போ வீட்டுக்குப் போகலாம். இன்னைக்கு உங்களுக்கு இதுவே போதும்.”

  

“எனக்கும் அப்படி தான் தோணுது. நீங்க, இவரு எல்லாம் ரொம்ப கிரேட் சக்தி. இதை வேலையா செய்றது ரொம்ப கடி தான்.”

  

“அப்படி யாராவது செய்றதால தான் எல்லோராலேயும் சுதந்திரமா உலாவ முடியுது.”

  

“உண்மை தான். என்னை டிராப் செய்துட்டு, உங்க ப்ளான் என்ன சக்தி?”

  

“கார்டனிங் செய்ய கொஞ்சம் டூல்ஸ், மண்ணு, பூந்தொட்டி எல்லாம் வாங்கனும்ன்னு யோசிச்சிருந்தேன். அதை இன்னைக்கு செய்யலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஓகேன்னா போற வழியில என் லிஸ்ட் எடுத்துட்டு, டீ ஷர்ட் மாத்திட்டுப் போகலாமா?”

  

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. உங்க டீ-ஷர்ட் quotes சூப்பரா இருக்கு. உங்களை பார்த்த உடனே முதல்ல அதை தான் படிப்பேன்.”

  

பேசியப்படி சக்தி ஜீப்பை செலுத்த, இரண்டுப் பேரும் சக்தி தங்கி இருந்த வீட்டை அடைந்தார்கள்.

  

சத்யா பாட்டியுடன் பேச்சுக் கொடுக்க, சக்தி தன்னுடைய லிஸ்ட் எடுத்து வர அவளுடைய

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.