This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“நீ வீட்டுக்கு வா சக்தி. நான் சொல்றேன்,” என்றதற்கு மேல் சத்யா விபரம் எதுவும் சொல்லவில்லை.
சக்தியும் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.
முடிந்த அளவு வேகமாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, உடை மாற்றி ஜீப்பில் சத்யாவின் வீட்டை அடைந்தாள் சக்தி.
கதவை திறந்த ஷாலினி, சக்திக்கு ஒரு ஹாய் சொல்லி விட்டு, “அம்மா கிச்சன்ல இருக்காங்க,” என்றாள்.
தோசை வாசனை சக்தியின் மூக்கை துளைத்தது! முன்பு சாப்பிட்ட சத்யாவின் தோசை - சட்னி ஞாபகத்தில் நாவில் நீர் ஊற சமையலறைக்கு சென்றாள் சக்தி.
“தோசை சாப்பிடுறீயா சக்தி?” என அவள் அங்கே வந்ததும் கேட்டாள் சத்யா.
“இதைக் கேட்கனுமா சத்யா?” என்ற சக்தி எங்கே உட்காருவது என்றக் கேள்வியுடன் கண்களை சுழற்றினாள்.
சக்திக்காக ஸ்டவுக்கு பக்கத்தில் இருந்த பொருட்களை ஓதுக்கி சுத்தப் படுத்தினாள் சத்யா.
“ஒரு இம்பார்டன்ட் விஷயம் இருக்கு சக்தி. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து இப்படி உட்காரு, ஷாலினிக்கு தோசை கொடுத்துட்டு வரேன்,” என்றாள் சத்யா.
கிச்சன் மேடையில் சுலபமாக ஏறி அமர்ந்துக் கொண்டு சத்யா தோசை சுடுவதை வேடிக்கைப் பார்த்தாள் சக்தி.
“தோசை தான் உன்னோட வீக் பாயின்ட் போலருக்கே! சிக்ஸ் ஃபீட், மஸ்குலர் பில்ட், கூடவே தோசை சுட தெரிஞ்சிருக்கனும். அதையும் புதுசா லிஸ்ட்ல சேர்த்தாச்சு சக்தி,” என்று சொல்லி கண்களை சிமிட்டினாள் சத்யா.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.