(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“பின்னே, உனக்கு என்ன லவ் லெட்டரா அனுப்புவாங்க!?”

  

“சக்தி! ரொம்ப பேசினா உனக்கு தோசை கிடையாது!”

  

“நீ என்ன தரது? நானே எடுத்துப்பேன்.”

  

சத்யா தோசை இருந்த தட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று யோசிப்பதற்கு முன்னாலே அந்த தட்டை இலகுவாக கையில் எடுத்திருந்தாள் சக்தி.

  

“சரியான சாப்பாட்டு ராமியா மாறிட்ட சக்தி. சரி, இந்த லெட்டருக்கு வருவோம். நாம அஹல்யா பத்தி விசாரிக்குறது தெரிஞ்சவங்க யாரோ தான் அனுப்பி இருக்காங்க. யாரா இருக்கும்?”

  

“நாம பேசினது சவீதா, டாக்டர் பிரசாத்.”

  

“சவீதா இப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க. நேரா போய் கேட்பாங்க ,திட்டுவாங்க. டாக்டருக்கு இதுக்கெல்லாம் டைம் இருக்குமான்னு தெரியலை. ஆனாலும் அவங்க இரண்டுப் பேருக்கு தானே நாம அஹல்யா பேரை சொல்லி விசாரிக்குறது தெரியும்?”

  

“ஹுஹும்... அங்க தான் தப்பு செய்ற சத்யா. அவங்க இரண்டுப் பேருக்கு மட்டுமா தெரியும்?”

  

“வேற யாரு, அபினவுக்கு தான் தெரியும்!”

  

“யோசி சத்யா. நாம அன்னைக்கு டாக்டர் கிட்ட லிஃப்ட்ல இருந்து பேசினோம். கூட இன்னும் இரண்டுப் பேரு இருந்தாங்க.”

  

“ஆமா, பர்வீனும், இன்னொரு டாக்டரும் இருந்தாங்க.”

  

“அப்போ அஞ்சு பேருக்கு தெரியும். இந்த அஞ்சு பேரும் தெரிஞ்சோ தெரியாமலோ இன்னும் எத்தனையோ பேர் கிட்ட நாம பேசினதை பத்தி சொல்லி இருக்கலாம்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.