(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“ஆமாம்! யாரா இருந்தாலும் எதுக்கு இப்படி ஒரு லெட்டர் அனுப்பனும்?”

  

“அது யோசிக்க வேண்டியது தான். இந்த லெட்டரைப் பார்த்து ஹாண்டில் செய்யனும் சத்யா. ஃபோரன்சிக் லேப்க்கு அனுப்பி வேற யாருடைய கைரேகை மத்த தடயங்கள் இருக்கான்னு கண்டுப்பிடிக்க சொல்லனும். சென்னையில எனக்கு தெரிஞ்ச ஒரு ஃபோரன்சிக் எக்ஸ்பர்ட் இருக்கார். அவர் கிட்ட அனுப்பினா அனலைஸ் செய்து சொல்வார்,” லெட்டரையும் கவரையும் மடித்து தன் கர்ச்சீப்பில் பத்திரப் படுத்தினாள் சக்தி.

  

“கொஞ்சம் பயமா இருக்கு, ஆனா த்ரில்லிங்காவும் இருக்கு சக்தி!”

  

“இ...“ என சக்தி பதில் சொல்ல தொங்கிய போது, “சத்யா” என்று அலறிய தென்றல்வாணன் குரல் பக்கத்தில் கேட்டது.

  

தென்றல்வாணனின் முகம் அவன் கோபத்தில் இருப்பதை தெளிவாக சொன்னது.

  

அவனுடைய கையில் இருந்த ஜிப்லாக் கவரில் சத்யாவிற்கு வந்திருந்த வெள்ளை நிற கவர் போலவே ஒரு கவர் இருந்தது.

  

🌼🌸❀✿🌷

   

ப்படியே அமைதியா இருந்தா எப்படி அஹல்யா? நீங்க சொல்லனும்னு நினைச்சதை சொல்லுங்க,” என்றான் அபினவ்.

  

ஸ்லைடில் சிரிப்பு பொங்க வழுக்கி கொண்டு இருந்த அருணை பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தாள் அஹல்யா.

  

“அஹல்யா?”

  

“நீங்க என்னைப் பத்தி நினைக்குறது தப்பு அ... சா...ர்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.