“அது என்ன தோசை மட்டும்? உன்னை மாதிரி எல்லாமே நல்லா டேஸ்ட்டா சமைக்க தெரியனும்னு சேர்த்துக்கோ,” என சக்தியும் அவள் தோரணையிலேயே பதில் சொன்னாள்.
“உனக்கு இருந்தாலும் வாய் ஜாஸ்தி தான். இந்த வாய்க்கு நீ இவ்வளவு வருஷம் டிபார்ட்மென்ட்ல இருந்ததே அதிசயம் தான்!”
“அதை பத்தி இப்போ எதுக்கு சத்யா. வேற ஏதாவது பேசு.”
“சரி அது வேண்டாம். இந்தா இதைப் பாரு சக்தி. இப்போ எதுவும் பேசாதே. ஷாலினி மாடிக்கு போகட்டும்,” மெதுவாக சக்தியுடன் சொல்லிவிட்டு கிச்சன் ஷெல்ஃபில் மறைத்து வைத்திருந்த கவரை நீட்டினாள் சத்யா.
சக்தி கவருக்குள் இருந்த பேப்பரை எடுத்துப் படித்தாள். பிரின்ட் செய்யப்பட்ட ஒரே ஒரு வரி தான் இருந்தது.
அஹல்யா பத்தி விசாரிக்குறீயே செத்துப் போன சேகரன் பத்தி விசாரிச்சா உண்மை தெரியும் 🃏 🃏 🃏.
பேப்பரை மடித்து விட்டு, கவரை கவனித்தாள் சக்தி. சத்யாவின் பெயரும் முகவரியும் மட்டும் இருந்தது.
போஸ்ட் ஸ்டாம்ப், தேதி என கவனித்த சக்திக்கு அதனால் பெரிய க்ளூ கிடைத்து விட போவதில்லை என்பது தெளிவாகவே புரிந்தது.
“போய் ஹோம்வொர்க் முடிச்சுட்டு என் கிட்ட எடுத்துட்டு வந்து காட்டு!” ஷாலினியை மாடிக்கு அனுப்பி விட்டு சக்தியிடம் வந்தாள் சத்யா.
“யாருடா என் பேருக்கு லெட்டர் அனுப்புறதுன்னு பார்த்தா, இப்படி ஒரு லெட்டர் சக்தி!”