(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 05 - சசிரேகா

ரவு உறங்கும் நேரம் வரவும் கொம்பன் சிறுபிள்ளை போல தன் தாயிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்

  

”ஏழு கழுதை வயசாகுது இன்னும் என்ன பயம் வேண்டிக்கிடக்கு போடா போய் படுத்து தூங்கு போ உனக்காக என் மருமகள் எவ்ளோ நேரம்தான் தூங்காம காத்திருப்பாளாம்”

  

”அய்யோ அம்மா என் பயமே அவளை பார்த்துதான், அவளுக்கென்ன நிம்மதியா தூங்கறா, என்னாலதான் தூங்கவே முடியலைம்மா, இனிமேல நான் உன்கூடவே படுத்து தூங்கறேன்மா, என் செல்ல அம்மா இல்லை நான் உன்னோடவே படுத்துக்கவா” என கெஞ்ச அவரோ

  

”கூடாது எழு எழுடா, இத்தனை நாளும் நான் உனக்கு கண்ணுக்கு தெரியலை அப்பல்லாம் தனியா காட்டுல மேட்டுல அந்த நாய்களோட படுத்து தூங்கின, இங்க வந்த பின்னாடி என்னவோ நாடகம் போடறியே, உன் நடிப்பெல்லாம் இங்க எடுபடாது கிளம்பு போ”

  

”அம்மா” என ஈனமாக அழைக்க அவரோ மனம் இறங்கவில்லை அதற்குள் காவேரியோ

  

”கொம்பா எங்க போன? கொம்பன் மிஸ்டர் கொம்பன்” என அழைக்க அவனுக்கு கோபமே வந்தது

  

”இவளை”

  

”டேய் பார்த்தியா எவ்ளோ பாசமா உன்னை தேடறாள்ன்னு, கொஞ்சமாவது உன் மனசுல ஈரம் இருக்கா, போடா போய் அவள்கூட படுத்துக்க”

  

”இல்லைம்மா வேணாம்மா”

  

”ஏன்டா”

  

”கையில அருவாளோட படுத்துக்கறா, தப்பித்தவறி என் கை அவள் மேல பட்டா என்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.