(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

கழுத்தை அருவாளால கீறிவிடறாம்மா”

  

”அச்சோ ப்ச் என்னத்த சொல்லி அழறது, இங்க பாரு நான்கூட என் வீட்ல உன்னை விட செல்லமா வளர்ந்தவதான், ஆனா கல்யாணம் ஆன பின்னாடி என்னாச்சி புருஷன் வீடுதான் சொர்க்கம்னு என் விருப்பு வெறுப்பு பழக்க வழக்கங்களை மாத்திக்கிட்டு புகுந்த வீட்டுக்கு ஏற்ப நான் வாழ்ந்து காட்டலை, அதே போல நீயும் வாழ்ந்து காட்டு, என் மகனா இருந்துக்கிட்டு இப்படி பயப்படலாமா சொல்லு”

  

”ஆனா அம்மா அவள் ராட்சஸிம்மா”

  

”உங்கப்பாவும் லேசுபட்டவர் இல்லை மகனே, கல்யாணம் ஆன புதுசுல அவரும் எதுக்கெடுத்தாலும் கோச்சிக்கறது சண்டை பிடிக்கறதுன்னு இருந்தாரு, ஒவ்வொரு நாளும் நரகத்தை காட்டினாரு, அப்புறம் நான் கர்ப்பமானதும் கொஞ்ச கொஞ்சமா அவர் மாறினாரு, அதே போல காவேரியும் மாறுவா, ஒரு குழந்தை பிறந்தபின்னாடி பாரு நீதான் உலகம்னு உன்னையே சுத்தி சுத்தி வருவா”

  

”குழந்தையா அதுக்கு அவள் என்னை தொடவிட்டாதானே, அதோட அவளை எனக்கு பிடிக்கலைம்மா, என்னால எல்லாம் அப்பனாக முடியாது”

  

”இப்படி சொன்னா எப்படி நம்ம குடும்பத்துக்கு வாரிசு வேணாமா சொல்லு”

  

”அதுக்காக அவள்கிட்ட போய் மாட்டி நான் அல்லாடனுமா”

  

“கொஞ்ச நாளுக்குதான் கழுதைக்கு வாக்கப்பட்டா உதைச்சிதான் ஆகனும், நாய்க்கு வாக்கப்பட்டா குலைச்சிதானே ஆகனும் வேற வழி“

  

”ஆனா அவள் பேய்மா, பேய் பிசாசு ராட்சஸி கூட எப்படிம்மா குடும்பம் நடத்தறது”

  

”இப்படியெல்லாம் பேசக்கூடாது, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சி  கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தியோ அதையெல்லாம் மறந்துடு, இனிமேல நீ வாழப்போறதுதான் உண்மையான வாழ்க்கை, நல்லபடியா வாழ்ந்து நல்ல பேர் எடுக்காம

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.