இப்படி நீ பயந்தா பார்க்க நல்லாவாயிருக்கு, கொம்பன்னா என்ன ஆயிரம் யானைக்கு சமம் வீரன்டா நீ”
”நான் வீரனா இருந்து என்ன பிரயோசனம், அவள் சூரியா இருக்காளே, நரித்தனமா யோசிக்கறா, எனக்கு தண்டனை தர்றா, அவள் சொன்னது போலவே எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தை காட்டறாள்மா, பாவி என் வாழ்க்கையில வந்த நேரம் நான் ஆசை ஆசையா வளர்த்த நாய்கள் எல்லாம் என்னை விட்டு போகவிட்டுட்டா நல்லாயிருப்பாளா அவள்” என சபித்தான் கொம்பன்
”அடிபடுவ ராஸ்கல், என்ன பேச்சு இது, எல்லாம் அவள் நல்லாதான் இருப்பா, உன் நல்லதுக்குதானே இந்த ஏற்பாடு செய்தது, நாய்களோட என்னடா சகவாசம் உனக்கு, அதை விட்டுத்தள்ளு, மனுஷங்களோட பழகுடா நம்ம சொந்த பந்தங்கள் கூட நீ உறவாடி எத்தனை வருஷமாகுது, உன்னைப் பத்தி கேட்காதவங்க யாருமே இல்லை என்ன இவன் இப்படியிருக்கான்னு எல்லாருமே உன்னைப் பார்த்து பரிதாபப்பட்டிருக்காங்க
என்னதான் இருந்தாலும் நமக்குன்னு சொல்லிக்க நாலு சொந்தங்கள் வேணும்டா கொம்பா, நல்ல பேரை சம்பாதிக்கனும், நாலு நல்லவங்களையும் சம்பாதிச்சி வைக்கனும், அப்பதான் வாழ்க்கையில முன்னேற முடியும், என் பேச்சைக் கேளு, நடந்ததை தப்பான கண்ணோட்டத்தில பார்க்காத, பொறுமையா நிதானமா யோசிச்சிப் பாரு, எல்லாமே நல்லதுக்குன்னு உனக்கே புரியும் சரியா
என் பட்டுல்ல, என் ராஜா இல்லை, போடா போ போய் தூங்கு போ, உன் பொண்டாட்டி ரொம்ப நேரம் உன்னை தேடிக்கிட்டு இருக்கா, அவளுக்கு கோபம் வந்துடப்போகுது கோபத்தில உன்னை கண்டபடி திட்டிகிட்டி வைச்சிடப் போறா, சமத்தா போய் அவள்கிட்ட சேரு, அப்படியே அவள் கோபத்தில நாலு வார்த்தை திட்டினாலும் கேட்டுக்க தப்பில்லை, அவள் என்ன யாரோவா உன் பொண்டாட்டிதானே, அனுசரிச்சி வாழ கத்துக்க போப்பா போ“ என பாசமாக அனுப்பி வைக்க கொம்பனோ நொந்தபடியே விதியே என காவேரியின் அறை நோக்கிச் சென்றான். அதற்குள் எதிர்பட்ட காவேரியோ
”கொம்பா உன்னை எங்கெல்லாம் தேடறது, எங்க போன நீ” என கோபமாக கேட்க அவனோ அவளை ஏற இறங்க பார்த்து எதுவும் பேசாமல் அமைதியாக அறைக்குள் சென்று