”அட அந்த அருவாளை தூக்கிப் போட உன்னால முடியாதா என்ன”
”முடிஞ்சிருக்கும் அதென்ன பெரிய விசயமா எனக்கு, ஆனா அவளுக்கு நடந்த அநீதி அது என்னாலதான்ங்கற குற்ற உணர்ச்சி எல்லாம் சேர்ந்து என்னால எதையும் செய்ய முடியாம போச்சிடா”
”சரி விடு நடந்ததை பத்தி யோசிச்சி என்ன பலன், இனிமேலயாவது உஷாரா இரு எதுக்கும் அவளை விட்டு தள்ளியிரு”
”நான் தள்ளியிருந்தாலும் வம்புக்குன்னே வந்து நிக்கறாளே என்ன செய்றது”
”நரகத்தை காட்டறேன்னு சொன்னாங்களே அது இதுதானா”
”உண்மைதான் அவளால எனக்குள்ள எழற உணர்ச்சிகள் இருக்கே அதை அடக்க முடியாம நான் நரகவேதனையைதான் அனுபவிக்கிறேன்”
”நண்பா எனக்கொரு சந்தேகம்”
”என்ன”
“உனக்கு எழற உணர்ச்சிகள் ஏன் அவளுக்கு எழல“
”அவள் என்னை மனுஷனா பார்த்தாதானே ஏதோ பழிவாங்கற மாதிரியே பார்த்து வைக்கறா”
”இதுக்கெல்லாம் காரணம் இந்த ஊர்க்காரங்கதான், நீ சந்நியாசி ஆக கூடாதுன்னு நல்லவிதமா நினைச்சவனுங்க உன் முறைபொண்ணை உனக்கு கட்டி வைக்கனும்னு தப்பா நினைச்சாங்க பாரு, அதுலதான் நீ மாட்டிக்கிட்ட”