(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

கட்டுப்படுத்தறது எப்படின்னு யோசி வழி கிடைக்கும் இப்ப வா பசிக்குது சாப்பிடலாம்” என அழைக்க அவனும் எழுந்து சாப்பிடச் சென்றான், அங்கு காவேரி இருக்கவும் அவனுக்கு வெறுப்பே வந்தது

  

”இவளை வைச்சிக்கிட்டு என்னால சாப்பிட முடியாது பட்டினி கிடந்தாலும் கிடக்கிறேன்” என சொல்ல கணக்குபிள்ளையோ

  

”நண்பா அவங்க பாட்டுக்கு அங்க இருக்காங்க, நீ பாட்டுக்கு இங்க சாப்பிடப்போற, நான் வேற நடுவில இருக்கறப்ப உனக்கு எந்த சேதாரமும் நடக்காது, என்னை நம்பி வா பசிக்குது” என கைபிடித்து இழுத்துக் கொண்டு சென்று அமர்ந்தான். கூடவே கொம்பனும் அமர்ந்தான்.

  

இருவருக்கும் பரிமாற காவேரியே வந்தாள், அதை அவன் தடுத்தான் ஆனாலும் கேட்கவில்லை, பரிமாறிவிட கணக்குபிள்ளையும் கொம்பனும் குழம்பி போய் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு சாப்பிடலானார்கள், இருவருக்குமே பசி என்பதால் வேக வேகமாக சாப்பிட அவளும் பரிமாறி விடலானாள், வயிறு நிறைந்தபின்புதான் தலையை தூக்கிப் பார்த்தான் கொம்பன் காவேரியும் அவன் எப்போதுடா தன்னை பார்ப்பான் என்பது போல காத்துகிடந்தாள், இப்போது அவன் அவளை பார்க்கவும் சந்தோஷத்தில் இதழ்விரிய புன்னகை பூக்க அதில் தடுக்கி விழுந்தான் கொம்பன், அவசரமாக பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை உலுக்கினான்

  

”டேய் நண்பா ராட்சஸி சிரிக்குதுடா”

  

”சிரிச்சா சிரிக்கட்டும் நீ ஏன் பார்க்கற சாப்பிடு” என சொல்ல உடனே கொம்பனும் வேக வேகமாக சாப்பிட்டு முடித்து காவேரியை பாராமலே எழுந்தான், கூடவே கணக்கு பிள்ளையும் எழுந்தான் இருவரும், கைஅலம்ப செல்ல பின்னாடியே காவேரி வந்தாள். அவளின் கால் கொலுசு சத்தம் கேட்டு கொம்பனோ கணக்குபிள்ளையிடம்

  

”நண்பா அந்த ராட்சஸி நம்ம பின்னாடியே வர்றா”

  

”ஆமாம் நண்பா எச்சரிக்கை ஏதோ நடக்கப் போகுது, எதுக்கும் நீ பின்னாடி பார்க்காம

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.