(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அந்த சிரிப்பு அவனுடைய கண்களிலும் எதிரொலித்து மனதை ஈர்த்தது.

  

சக்தி பார்வையை திருப்பிக் கொள்ள தான் நினைத்தாள். ஆனால் எதுவோ ஒன்று அவளை தடுத்தது!

  

“ஹ்க்கும்!!! ஹ்க்கும்!!! ஹ்க்கும்!!!”

  

திடுக்கிட்டு பார்வையை திருப்பி சத்யாவைப் பார்த்தாள் சக்தி.

  

சத்யா ‘என்னம்மா நடக்குது?’ என்று கண்களால் கேட்டாள்.

  

சக்தியின் நல்லவேளையாக ஆங்கே வந்த தென்றல்வாணன் அப்போது பேசி அவளைக் காப்பாற்றினான்.

  

“சத்யா, அவர் ரெஸ்ட் எடுக்குறார்னா எடுக்கட்டும். நான் அஹல்யாவை விசாரணைக்கு ஸ்டேஷனுக்கு வர சொல்லி இருக்கேன். உடனே போயாகனும்!”

  

“என்னது அஹல்யாவை ஸ்டேஷன் வர சொல்லி இருக்கீங்களா?? என்னங்க இப்படி சொல்றீங்க? அபினவ்க்கு இது தெரியுமா?” என்றாள் சத்யா பரபரப்புடன்.

  

“நேத்து ஈவ்னிங் சவீதா கிட்ட பேசிட்டு, நேரா அஹல்யா வீட்டுக்கு போய் காலைல பத்து மணிக்கு இன்வெஸ்டிகேஷனுக்கு வர சொன்னேன். அப்போ அபினவ் அங்கே தான் இருந்தான். அவங்க இரண்டுப் பேரும் கல்யாணம் செய்துக்குறதா முடிவு செய்திருக்காங்களாம்!”

  

“கல்யாணம் தெரிஞ்ச விஷயம்! ஆனால், என்னங்க திடீர்னு புது விசாரணை? அந்த மொட்டைக் கடிதாசினாலேயா???”

  

“சத்யா!”

  

“சரி, சரி நான் கேட்கலை! அபினவ் கல்யாணம் செய்துக்கப் போற பொண்ணாச்சேன்னு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.