(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

ஒரு வினாடி நிதானித்து விட்டு,

  

இல்லை கோபமா எதுவும் சொல்லலை... வருத்தப் பட்டாங்க அவ்வளவு தான்...” என்றாள் பாரதி!

  

அது தானே பார்த்தேன்! எனக்கு தெரியும் அம்மா இதை எல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாங்கன்னு. அவங்களுக்கு இது மாதிரி காஸிப் செய்றது சுத்தமா பிடிக்காது... மத்தவங்க இது மாதிரியான விஷயம் எல்லாம் ஒரு இரண்டு மூணு நாள் பேசுவாங்க, அப்புறம் வேற விஷயம் வரும், அதுல இது காணாமல் போகும்...”

  

உங்களை யாரும் எதுவும்...”

  

தயக்கத்துடன் ஒலித்த பாரதியின் பாதி வாக்கியத்தைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் விவேக்.

  

இதை எல்லாம் கேட்க எனக்கு நேரம் இருந்தா, நான் அந்த நேரத்தை எல்லாம் உன்னோட ஸ்பென்ட் செய்ய மாட்டேனா ரதி? நம்மைப போல தான் எல்லோருமே... அவரவருக்கு ஆயிரம் வேலை இருக்கு... இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் கேட்டுட்டு, அடுத்த விஷயம் பேச ஆரம்பிச்சிடுவாங்க... விஐபி'ஸ் பத்தி தானே இது போல கிசு கிசு எல்லாம் வரும், நீயும் பெரிய ஆள் ஆகிட்ட!”

  

ம்ம்ம்....”

  

அம்மாக்கு தெரிஞ்சதால ஒன்னுமில்லை ரதி... அம்மா ஒன்னும் ஓல்ட் ஃபேஷன்ட் இல்லை... புரிஞ்சுப்பாங்க...”

  

ம்ம்ம்...”

  

அதுவும் எனக்கு தெரியும்னு தெரிஞ்சிருந்தா உன் கிட்ட கேட்டே இருந்திருக்க மாட்டாங்க...

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.