”அப்படியா சரிப்பா சொல்லு என்ன வேணும் சொல்லு, வேஷ்டியா சட்டையா” என கேட்க அவனோ பேச தயங்கி அந்த லிஸ்ட் பேப்பரை கசக்கி வைக்க
”சொல்லு கொம்பா நீ கேட்கற துணி இங்க இல்லைன்னாலும் வேற கடையில இருந்து வரவழைக்கிறேன் சொல்லுப்பா” என சொல்ல அவனோ இன்னும் கூச்சத்தில் நெளிய கணக்குபிள்ளையோ பொறுமையிழந்து
”அட நண்பா அதான் அவரே இவ்ளோ தூரம் சொல்றாருல்ல பின்ன ஏன் கூச்சப்படற கொடு அந்த லிஸ்ட்டை” என அந்த லிஸ்டை பறித்து முதலாளியிடம் தந்து
”இதுல இருக்கறது எல்லாம் கொண்டு வாங்க போதும்” என சொல்ல அதிர்ந்தான் கொம்பன்
”டேய் ஏன்டா இப்படி செய்ற மானம் போகப் போகுது”
”இது வாங்காம போனா உன் முறைப்பொண்ணு உன் மானத்தை காத்துல பறக்க வைப்பா அதை விட இது எவ்வளவோ மேல் பேசாம இரு நான் பார்த்துக்கிறேன்” என சொல்லிவிட்டு முதலாளியை பார்க்க அவரோ லிஸ்ட்டை படித்துவிட்டு சின்னதாக சிரித்து கொம்பனிடம்
”என்னப்பா வீட்ல இருந்து கொடுத்துவிட்டாங்களா” என கேட்க அவனோ கூச்சத்தில் நெளிய கணக்குப்பிள்ளையோ
”ஆமாம் ஆமாம் இதுல இருக்கறதெல்லாம் இங்க விக்குதுதானே”
”ஏன் இல்லாம எல்லாமே இருக்கு நல்ல பிராண்டடாவே எடுத்து கொடுக்கிறேன்”
”அப்படியா சந்தோஷம்”
”அதுல பாருங்க இதுல ஒரு பொருள் மட்டும் நம்ம கடையில விக்காது”