”அய்யோ”
”ஆஆஆ அப்படியில்லை அதுவும் முக்கியமான பொருள்தான் மெடிக்கல் ஷாப்ல விக்கும், இல்லைன்னா மளிகைகடையில விக்கும், அங்க வேணா போய் வாங்கிக்குங்க மிச்சதெல்லாம் நான் எடுத்து வைக்கிறேன்” என சொல்ல இருவரும் பூம்பூம் மாடு போல தலையாட்டி வைத்தார்கள்.
அடுத்த பத்தாவது நிமிஷம் பணம் கொடுத்து பில் செட்டில் செய்துவிட்டு துணிபையுடன் வீர நடை போட்டுக் கொண்டு கடையை விட்டு வெளியேறினார்கள் கொம்பனும் அவனது நண்பனும்
”எப்படியோடா துணி வாங்கியாச்சி”
”பாதி கிணறு தாண்டியாச்சி மீதியும் தாண்டனும் நேரா மெடிக்கல் ஷாப் விடு நண்பா”
”சரி சரி” என சொல்லிய கொம்பன் பைக்கை ஓட்டிக் கொண்டு நேராக மெடிக்கல் ஷாப் சென்றான் அங்கும் பெண்களே இருக்கவே அதிர்ந்தான்
”என்னடா இது எங்க போனாலும் பொண்ணுங்களாவே இருக்காங்க”
“இப்ப பொண்ணுங்களுக்குதான் காலமே, ஒரு காலத்தில நாம அவங்களை வீட்டோட அடக்கி வைச்சோம், இப்ப நாம அடங்கி போறோம்”
”சரி சரி நான் இங்கயே இருக்கேன் நீ போய் வாங்கிட்டு வா“
”ஏன்பா என் பொண்டாட்டிக்கா பொருள் வாங்க வந்தோம் உன் பொண்டாட்டிக்குதானே அதோட நான் போய் வாங்கினா என்னை தப்பா நினைப்பாங்கப்பா இதே நீன்னா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, துணிகடையில கூட யாரும் உன்னை தப்பா நினைக்கலைல்ல அப்புறம் என்ன வாப்பா வா வா” என விடாப்பிடியாக அழைத்துக் கொண்டு சென்றான்.